SKIP TO MAIN CONTENT

கொரோனா வைரஸால் சில மொழிகளும் அழிவடையும் ஆபத்து!

 coronavirus
Source: Pixabay

2 min read

Published

Updated


Skip to article content

கொரோனா ஆட்கொல்லி நோய் லட்சக்கணக்கான வயோதிபர்களை உலகெங்கிலும் காவு கொண்டிருப்பதால், அந்த வயதானவர்களுடன் சேர்ந்து பல கலாச்சாரங்களும் மொழிகளும்கூட காணாமல்போவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

'முக்கியமாக ஆஸ்திரேலியாவில் பூர்வீக குடிமக்கள் பேசுகின்ற பல்வேறு மொழிகள் மீது, அம்மக்களும்,  அவர்களது அடுத்த தலைமுறையினரும், மொழியை பயில்வதற்கு ஆர்வமுள்ளவர்களும் கொண்டுள்ள தொடர்ச்சியான ஈடுபாட்டின் காரணமாகவே அம்மொழிகள் உயிர்ப்புடன் பேணப்படுவதற்கான சாத்தியமுள்ளது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா உயிர்கொல்லி நோய், வயதானவர்களை அடுத்த தலைமுறையினரிடமிருந்து தள்ளி வைத்திருக்கிறது. பரந்தளவில் தலைமுறைகளுக்கு இடையில் இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறது. முந்தைய தலைமுறையிடமிருந்து அடுத்த தலைமுறையிடம் கைமாறப்படவேண்டிய கலாச்சார கூறுகள், மொழி மற்றும் பண்பாட்டு விழுமியங்கள் ஒரு தலைமுறையுடன் அழிந்துபோகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது' என மொழி தொடர்பான ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

உதாரணமாக இத்தாலியில் கடந்த பத்து வருடங்களில் இத்தாலியின் பூர்வீகத்தையும் தொன்மையையும் கற்பதற்கு அந்நாட்டில் இளம் தலைமுறையினரிடம் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டிருந்தது. ஆனால், அங்கு வயோதானவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பல லட்சக்கணக்கான சாவு இளம் தலைமுறையினரின் கலாச்சார கைமாற்றத்தினை அடியோடு அசாத்தியமாக்கியிருக்கிறது என  Edith Cowan பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் Dr Annamaria Paolino தெரிவித்துள்ளார்.

யுனெஸ்கோவின் அண்மைய எதிர்வுகூறலின்படி, உலகளாவிய ரீதியில் தற்போது புழக்கத்திலுள்ள மொழிகளில் அரைவாசி மொழிகள் - 21 ஆம் நூற்றாண்டுடன் - அழிந்துபோகும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, உலகம் தற்போது சராசரியாக 14 நாட்களுக்கு ஒரு மொழியை இழந்துவருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now