ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இருபத்து நான்காக அதிகரித்துள்ளது.
மெல்பேர்ன் மருத்துவமனையொன்றின் புற்றுநோய் பிரிவில் சிகிச்சைபெற்றுவந்த 60 வயதுகளிலுள்ள பெண் இன்று மரணமடைந்ததாக விக்டோரிய தலைமை மருத்துவ அதிகாரி Brett Sutton அறிவித்தார்.
குறித்த மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவில் ஏற்பட்ட மூன்றாவது மரணம் இதுவாகும்.
அதேநேரம் விக்டோரியாவிலுள்ள மற்றுமொரு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த 70வயதுகளிலுள்ள பெண் ஒருவரும் மரணமடைந்ததாக இன்று அறிவிக்கப்பட்டது.
இதுதவிர குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 85 வயது ஆண் ஒருவரும் கடந்த இரவு மரணமடைந்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 24 ஆனது. இதில் 10 மரணங்கள் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சம்பவித்துள்ளது.
ஆஸ்திரேலியா முழுவதும் 5,050 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதில் 2300 பேர் நியூ சவுத் வேல்ஸை சேர்ந்தவர்கள். 1,036 பேர் விக்டோரியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
