கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்றிரவு ஆஸ்திரேலியாவில் மேலும் இருவர் உயிரிழந்தனர்.
இதன்மூலம் கொரோனா தொற்று காரணமாக ஆஸ்திரேலியாவில் பலியானோர் எண்ணிக்கை பதினாறாக அதிகரித்துள்ளது.
விக்டோரியாவைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவரும் குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த 75 வயது முதாட்டி ஒருவருமே நேற்றிரவு மரணமடைந்தவர்களாவர்.
குறித்த மூதாட்டி அண்மையில் சிட்னியை வந்தடைந்த Ruby Princess உல்லாசக் கப்பலில் பயணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் எட்டுப்பேரும் விக்டோரியாவில் நால்வரும் குயின்ஸ்லாந்தைச் இருவரும் மேற்று ஆஸ்திரேலியாவில் இருவரும் என மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை நாடு முழுவதும் சுமார் 3800-க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share
