கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆஸ்திரேலியாவில் பதினான்காவது நபர் மரணமடைந்துள்ளார்.
சிட்னி Dorothy Henderson முதியோர் இல்லத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 91 வயது முதியவர் ஒருவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
குறித்த முதியோர் இல்லத்தில் பரவிய தொற்று காரணமாக ஏற்கனவே அங்கிருந்த மூவர் மரணமடைந்திருந்தனர்.
இதேவேளை நாடு முழுவதும் சுமார் 3500-க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share
