கொரோனா வைரஸ் COVID-19 தொற்று உள்ளாதா என்பதை கண்டறியும் நோக்கில் கடந்த பதினான்கு நாட்களாக டார்வின் நகரில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 260 ஆஸ்திரேலியர்களும் இன்று வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். சீனாவின் Wuhan பிராந்தியத்தியத்தில் கொரோனா வைரஸ் பரவியதையடுத்து ஆஸ்திரேலிய அரசினால் இவர்கள் மீட்கப்பட்டு டார்வின் CBD யிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ள Howard Springs எனுமிடத்தில் தனி இடத்தில் வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் இன்று வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டாலும், ஜப்பானில் நிலைகொண்டுள்ள Diamond Princess சொகுசு கப்பலிலிருந்து மீட்கப்பட்டு Howard Springs ல் வைக்கப்பட்டிருக்கும் 164 பேரும் தொடர்ந்து அங்கேயே தங்கி இருப்பார் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். Diamond Princess சொகுசு கப்பலிலிருந்த ஆஸ்திரேலியர்களில் ஏழுபேருக்கு கொரோனா வைரஸ் COVID-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
