ஆஸ்திரேலியாவின் பிரதான தொழில்துறை நிறுவனங்களிலிருந்து கடந்த மூன்று நாட்களில் 35 ஆயிரம் பேர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.
கொரோனா தொற்று பீதி பரவிவருகின்ற தற்போதைய வேகம் மேலும் பல்லாயிரக்கணக்கில் பலரது வேலையை காவுகொள்ளவுள்ளது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை விடுத்த அறிவிப்பின் பிரகாரம், Virgin Australia தனது நிறுவனத்தின் 8000 தொழிலாளர்களை பணி இடைநிறுத்தம் செய்துள்ளது.
அதேபோல கசினோ நிறுவனம் 8100 தொழிலாளர்களை பணி இடைநிறுத்தம் செய்துள்ளது. சிட்னி, பிறிஸ்பன், கோல்ட் கோஸ்ட் ஆகிய நகரங்களில் இயங்கும் சூதாட்ட மையங்கள் கொரேனா பீதியினால் இழுத்து மூட்டப்பட்டதால் இந்த பணி இடைநிறுத்தம் இடம்பெற்றுள்ளது.
ஆனால், மொத்தமாக கசினோ நிறுவனத்தின் ஏனைய தொழில்துறைகளிலிருந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் கசினோவிலிருந்து வெளியில் விடப்பட்டுள்ள தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரம் என்றும் தொழிலாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, Rivers, Noni B, Katies போன்ற நிறுவனங்களிலிருந்து மொத்தம் ஆறாயிரத்து 800 தொழிலாளர்கள் கடந்த புதன்கிழமை பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.
Share
