ஆஸ்திரேலியாவில் சுமார் 500 பேருக்கு மேல் கலந்துகொள்ளும் நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த அறிவுறுத்தல் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பொதுப்போக்குவரத்து ஆகிவற்றுக்குப் பொருந்தாது.
இன்றையதினம் நாட்டின் தலைமை மருத்துவ அதிகாரி Brendan Murphy மற்றும் அனைத்து மாநிலங்களினதும் தலைவர்களுடனும் கலந்துரையாடிய பின் பிரதமர் ஸ்கொட் மொறிஸன் இவ்வறிவுறுத்தலினை விடுத்தார்.
இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 500 பேருக்கு மேல் கலந்துகொள்ளும் அநாவசிய நிகழ்வுகள் மற்றும் ஒன்றுகூடல்களை நடத்தாமல் தவிர்க்குமாறு பிரதமர் தெரிவித்தார்.
இந்நடவடிக்கை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உதவுமென அவர் மேலும் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் இதுவரை 156 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share
