ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதை 45 நிமிடங்களுக்குள் கண்டறியும் சோதனை-The Cepheid Xpert Xpress SARS CoV-2 ஆஸ்திரேலியாவில் பயன்பாட்டுக்கு வருகிறது.
இதற்கான அனுமதியை Therapeutics Goods Administration (TGA) ஆஸ்திரேலியா வழங்கியுள்ளது.
அதேநேரம் 15 நிமிடங்களுக்குள் கண்டறியும் மற்றொரு சோதனை முறைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இன்றைய நிலவரப்படி நாடு முழுவதும் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 1029 பேரும் விக்டோரியா மாநிலத்தில் 466 பேரும் இத்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் அறிகுறி தென்படுபவர்களை கண்டறிந்து அவர்களிடமிருந்து சோதனைக்கான மாதிரிகளை சேகரித்து ஆய்வகங்களில் பரிசோதித்து முடிவுகள் வர 2 அல்லது 3 நாட்கள் ஆகின்றன.
இதற்குள் நோயின் தாக்கம் அதிகரித்துவிடுகிறது. நோய் பரவலையும் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் கொரோனா விரைவு சோதனைமுறைகள் கண்டறியப்பட்டிருந்த நிலையில் இவற்றை ஆஸ்திரேலியாவிலும் பயன்படுத்துவதற்கு Therapeutics Goods Administration(TGA) அனுமதியளித்துள்ளது.
Share
