SKIP TO MAIN CONTENT

கொரோனா தாக்கத்திலிருந்து நாட்டை மீட்க வெளிநாட்டு மாணவர்களின் உதவியை கோரும் அரசு!

Nurses
SA government is boosting and upskilling the frontline workforce to prepare South Australia for the pandemic. Source: Getty Images/Tom Merton

1 min read

Published

Updated


Skip to article content

கொரோனா தொற்று காரணமாக நாட்டின் சுகாதரத்துறையில் ஏற்பட்டிருக்கும் பணியாளர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், ஆஸ்திரேலியாவில் தாதியர் கற்கைநெறியை மேற்கொண்டுவரும் வெளிநாட்டு மாணவர்களின் வேலைசெய்யும் மணித்தியாலக்கட்டுப்பாட்டினை நீக்குவதற்கு மொறிஸன் அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.

தற்போதுள்ள விச நடைமுறைகளின்படி, வெளிநாட்டு மாணவர்கள் வாரத்துக்கு 20 மணிநேரம் மாத்திரமே வேலைசெய்து பணமீட்டமுடியும்.

இந்தப்பின்னணியில் ஆஸ்திரேலியாவின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் தாதியர் கற்கைநெறியை கற்றுவருகின்ற மற்றும் பயிற்சி பெறுகின்ற சுமார் இருபதாயிரம் மாணவர்களுக்கு வேலைசெய்யும் நேரக்கட்டுப்பாட்டினை நீக்குவதன் மூலம், அவர்களை சுகாதரத்துறையினுள் உள்வாங்கி, குறிப்பிட்ட துறையில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஆளணிப்பற்றாக்குறையை நிவர்த்திசெய்யமுடியும் என்று பிரதமர் ஸ்கொட் மொறிஸன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now