ஆஸ்திரேலிய அரசியல்வாதிகள், நீதித்துறையினர் மற்றும் பொதுமக்கள் சேவைத்துறையில் உயர் பதவி வகிப்பவர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வு வழங்கப்படமாட்டாது என்றும் சம்பள உயர்வுக்கு பயன்படக்கூடிய நிதியை கொரோனாவினால் பாதிக்கப்பட்ட துறையின் மேம்பாட்டுக்கு பயன்படுத்தவுள்ளதாகவும் நிதி அமைச்சர் Mathias Cormann கூறியுள்ளார்.
இவ்வாறு சம்பள உயர்வினை இடைநிறுத்துவதற்கான கோரிக்கை பொதுச்சேவைகள் ஆணையாளரிடம் முன்வைத்துள்ளதாகவும் அந்தக்கோரிக்கை அங்கீகரிக்கப்படுமானால் அது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை, பொதுமக்கள் விவகார மையத்தின் பணிப்பாளர் John Roskam கூறும்போது, மேற்படி சம்பள உயர்வு நிறுத்தம் போதாது. பொதுமக்கள் சேவைத்துறையின் சம்பளம் 20 சத வீதத்தினால் குறைக்கப்படவேண்டும் என்று கருத்து வெளியிட்டுள்ளார்.
கடந்த வருடம் பெற்றுக்கொண்ட இரண்டு வீத சம்பள உயர்வுடன் பிரதமர் ஸ்கொட் மொறிசனின் தற்போதைய சம்பளம் ஆண்டொன்றுக்கு 549 250 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சி தலைவர் அந்தனி அல்பனீசியின் சம்பளம் ஆண்டொன்றுக்கு 390 000 டொலர்கள் ஆகும்.
Share
