பிரிட்டன் இளவரசர் சார்ள்ஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு வயது 71.
சமூக கடமைகளின் நிமித்தம் அவர் பல இடங்களுக்குச் சென்றிருப்பதால் எவ்வாறு இத்தொற்றுக்குள்ளானார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
அதேநேரம் இளவரசர் சார்ள்ஸ் நலமாக உள்ளதாக அரண்மனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மார்ச் 9ம் திகதி எலிசபெத் மகாராணியை இவர் சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது Windsor மாளிகையில் தங்கியுள்ள மகாராணி மற்றும் அவரது கணவருக்கு கொரோனா தொற்று சோதனை மேற்கொள்ளப்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை.
Share
