விக்டோரிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 25 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து, மாநிலம் தழுவிய ரீதியில் படிப்படியாக நீக்கப்படவிருந்த "கொரோனா கால கட்டுப்பாடுகள்" மீண்டும் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த கடந்த இரண்டு மாதங்களில் இன்றுதான் அதி கூடிய கொரோனா தொற்று பதிவாகியுள்ளதாக விக்டோரிய Premier Daniel Andrews தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து விக்டோரியால் இரண்டாம்கட்ட பரவல் ஏற்படுவதைத் தடுக்கும்வகையில், நாளை ஞாயிற்றுக்கிழமை 11.59pm முதல் பின்வரும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- வீடுகளில் கூடுவோரின் எண்ணிக்கை குடும்பத்தவர்களுடன் மேலதிகமாக ஐந்து பேர் மட்டும்.
- வெளியில் கூடுவோரின் எண்ணிக்கை பத்துக்கு மேற்படக்கூடாது.
- பல மாதங்களுக்கு பிறகு, வரும் திங்கட்கிழமை இயங்கவிருந்த திரையரங்குகள் மற்றும் உடற்பயிற்சிகூடங்கள் திட்டமிட்டபடி 20 பேர் என்ற கட்டுப்பாட்டுடன் திறக்கலாம்.
- உணவகங்கள், வழிபாட்டிடங்கள், நூலகங்கள், சமூக நிலையங்கள் போன்வற்றில் கூடுவோரின் எண்ணிக்கை இருபத்துக்கு மேற்படக்கூடாது. இந்த எண்ணிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஐம்பதாக உயர்த்துவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இக்கட்டுப்பாடு எதிர்வரும் ஜுலை 12 வரை நடைமுறையில் இருக்கும்.
இதேவேளை, உடல்நிலை சரியில்லாத பலரும், தம்மைத் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்க வேண்டிய பலரும் வேலைத்தளங்களுக்கு சமூகமளித்தமை தற்போது ஏற்பட்ட தொற்றுக்களுக்கான காரணங்களில் ஒன்றாக கண்டறியப்பட்டுள்ளது.
ஆகவே கொரோனா தொற்று ஏற்பட்டு பணிக்கு சமூகமளிக்கமுடியாதவர்கள் மற்றும் தனிமைப்படுதலுக்கு உட்படுமாறு பணிக்கப்பட்டவர்கள் paid leave- பெறமுடியாத சூழ்நிலையை எதிர்கொண்டால், அவர்களுக்கு 1500 டொலர்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை விக்டோரிய அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் Premier Daniel Andrews தெரிவித்தார்.
Share
