கொரோனா தொற்று காலப்பகுதியில் வேலையிழந்த மற்றும் நிதிநெருக்கடியை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியர்கள் தங்களது Superannuation நிதியில் 20 ஆயிரம் டொலர்களை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு அண்மையில் அறிவித்திருந்த நிலையில், இதற்கென விண்ணப்பித்தவர்களில் சுமார் நான்கு லட்சத்து 56 ஆயிரம் பேரின் கோரிக்கைகள்(கடந்த திங்கள் வரை) அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக கருவூலக்காப்பாளர் Treasurer Josh Frydenberg தெரிவித்துள்ளார்.
இதன்படி அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான நிதியை வைப்புச்செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளவர்கள் தமது முதல் தொகுதி பத்தாயிரம் டொலர்களை இந்த நிதியாண்டிலும் மிகுதி பத்தாயிரம் டொலர்களை அடுத்த நிதியாண்டிலும் பெற்றுக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை Superannuation நிதியை முன்கூட்டியே பெற்றுக்கொள்வதற்கான தெரிவினை அரசாங்கம் வழங்குகிறது என்பதற்காக நீண்ட கால நலன்களை அடகுவைத்து மக்கள் இந்த வழிமுறையைப் பின்பற்றுவது மோசமான விளைவுகளைவே தரும் என்றும் பொருளாதார ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.
Share
