ஐக்கிய இராச்சியம்(UK) தவிர கிட்டத்தட்ட அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கான தற்காலிக பயணத்தடைவிதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
நாளை வெள்ளிக்கிழமைமுதல் நடைமுறைக்கு வருகின்ற இந்த தற்காலிக பயணத்தடை, ஒரு மாத காலத்துக்கு நடைமுறையில் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் பரவி வருகின்ற கொரோனா வைரஸ் நோயினால் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தொட்டிருப்பதையடுத்து அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அமெரிக்காவின் இந்தப்பயணத்தடை UK தவிர 26 நாடுகளுக்கு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கான பயணத்தடை ஏற்கனவே நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நாடுகளிலுள்ள அமெரிக்கர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மாத்திரம் நாடு திரும்புவதற்கு அனுமதிக்கப்படுவர் என்றும், பரவி வருகின்ற வைரஸ் நோயிற்கு எதிராக அமெரிக்கா எடுத்துள்ள மிகக்கடுமையான நடவடிக்கை இது என்றும் ட்ரம்ப் மேலும் கூறியுள்ளார்.
Share
