கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவ ரீதியாக தனிமைப்படுத்தப்படவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் தங்களது நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து casual வேலையாட்களுக்கும் paid-sick leave நோய்க்கால விடுப்புப்பணத்தை கொடுக்கவுள்ளதாக Woolworths நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா முழுவதிலுமுள்ள Woolworths கிளைகளில் சுமார் 55 ஆயிரம் வேலையாட்கள் பணிபுரிகின்றார்கள். ஆக, தற்போது பரவி வருகின்ற வைரஸ் மூலம் தங்களது வேலையாட்கள் பாதிக்கப்பட்டால், அவர்களது தொழில் தரத்தின் அடிப்படையில் அவர்களை சுரண்டமுடியாது என்று கூறியுள்ள Woolworths நிறுவனம், casual பணியாளர்களுக்கு நோய்க்கால விடுப்புப்பணத்தை வழங்கவுள்ளதாக கூறியுள்ளது.
அதேபோன்று தமது பகுதிநேர மற்றும் முழுநேர பணியாளர்களுக்கும் விடுப்பு தொடர்பில் போதிய உதவிகள் வழங்கப்படும் எனவும் Woolworths அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக casual வேலையாட்கள் மருத்துவ ரீதியாக தனிமைப்படுத்தப்படவேண்டிய காலப்பகுதியில் அவர்களுக்கு நோய்க்கால விடுப்பு பணத்தை வழங்கவேண்டும் என்று அரசாங்கத்திடம் தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கையை பிரதமர் ஸ்கொட் மொறிஸன் நிராகரித்திருந்தமை தெரிந்ததே.
Share
