உலகை உலுக்கிவரும் coronavirus உயிர்கொல்லி நோய் ஆஸ்திரேலியாவில் இன்னொருவருக்கும் தொற்றியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தை சேர்ந்த 21 வயது பெண்ணுக்கு இந்த நோய் தொற்றியிருப்பது உறுதிப்பட்டிருப்பதன் மூலம் ஆஸ்திரேலியாவில் இதுவரை ஐவருக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
coronavirus நோய் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ள சீனாவின் Wuhan பகுதியிலிருந்து சிட்னிக்கு நேரடி விமானத்தில் வந்திறங்கிய பெண்ணுக்கே இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவ காரணங்களுக்காக அவர் தொடர்பான விவரங்களை வெளியிட மறுத்துள்ள சுகாதார வட்டாரங்கள், நோயாளிக்குரிய உயர் சிகிச்சை மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்கள்.
இதேவேளை coronavirus தொற்று காரணமாக சீனாவில் இதுவரை 80 பேர் பலியாகியுள்ள பின்னணியில், சீனாவுக்கு எந்தக்காரணத்தையிட்டும் போய் வந்த மாணவர்களிடம் சிட்னி மற்றும் மெல்பேர்ன் பகுதிகளை சேர்ந்த பாடசாலை நிர்வாகம் மருத்துவ சான்றிதழ்களை கோரியுள்ளதாக ஒரு செய்தி தெரிவிக்கிறது.
ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸை சேர்ந்த நால்வர் மற்றும் விக்டோரியாவை சேர்ந்த ஒருவர் உட்பட ஐவருக்கு coronavirus தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share
