கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆஸ்திரேலியாவில் மூன்றாவது நபர் மரணமடைந்துள்ளார்.
சிட்னி Baptist Care- Dorothy Henderson முதியோர் இல்லத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 82 வயது முதியவர் ஒருவரே இவ்வாறு மரணமடைந்த மூன்றாவது நபராவார்.
குறித்த முதியோர் இல்லத்தில் பணிபுரிந்த பெண் ஒருவரிடமிருந்து பரவிய தொற்று காரணமாக ஏற்கனவே 95 வயது மூதாட்டி மரணமடைந்திருந்தார்.
இதுதவிர பெர்த்தில் 78 வயது முதியவர் ஒருவரும் கொரோனா தொற்று காரணமாக அண்மையில் காலமானார்.
இதேவேளை நாடு முழுவதும் சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share
