குயின்ஸ்லாந்தில் எட்டு வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
சீனாவின் Wuhan பிரதேசத்திலிருந்து வந்த சுற்றுலா குழுவைச்சேர்ந்த இந்த சிறுவன் தற்போது Gold Coast வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாக குயின்ஸ்வாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சீனாவின் Wuhan பிரதேசத்திலிருந்து கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி ஆஸ்திரேலியாவுக்கு வந்த ஒன்பது பேர் கொண்ட சுற்றுலா குழுவைச்சேர்ந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது மருத்துவ சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுவருகிறார்கள் என்றும் தற்போது வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள சிறுவனின் பராமரிப்பாளர்களான 44 வயது ஆணும் 42 வயது பெண்ணும் வைரஸ் தொற்றுக்கு ஏற்கனவே உள்ளானவர்களாக உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் சுகாதார வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ள எண்ணிக்கையின்படி, கொரோனா வைரஸின் தொற்றுக்குள்ளானவர்கள் குயின்ஸ்லாந்தில் மூவர் என்றும் ஆஸ்திரேலியா முழுவதும் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
