கொடிய உயிர்கொல்லி வைரஸ் நோயான coronavirus தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து சீனாவின் Wuhan மத்திய நகருக்கான பயண எச்சரிக்கை அதிகரிக்கப்பட்டுள்ள அதேநேரம் ஆஸ்திரேலிய விமானநிலையங்களில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
சீனாவின் Wuhan மத்தியநகரிலிருந்து திரும்பிய நபர் ஒருவரே குயின்ஸ்லாந்தில் coronavirus குறித்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கேற்ப இந்த பயண எச்சரிக்கையை அதிகரிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிஸன் தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கான பயணம் தொடர்பில் எந்த பயண எச்சரிக்கைகளும் விடுக்கப்படவில்லை என்றும் சீனாவின் Wuhan பகுதிக்கு செல்பவர்களுக்கான பயணம் தொடர்பில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட coronavirus உயிர்கொல்லி நோய் தொடர்பில் ஆஸ்திரேலிய சுகாதார தரப்பினர் தொடர்ந்தும் கண்காணித்துவருவதாகவும் இந்த உயிர்கொல்லி நோய் பரவாமல் தடுப்பதற்கு ஏற்ற நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொண்டுவருவதாகவும் ஆஸ்திரேலிய சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
Share
