Diamond Princess என்ற உல்லாசக்கப்பலில் பயணம் செய்த இரண்டு ஆஸ்திரேலியர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது உறுதிப்படுத்துப்பட்டுள்ளது.
ஜப்பான் சென்றுள்ள இக்கப்பலில் பயணம் செய்த 3771 பயணிகளில் பத்துப்பேருக்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பத்துப்பேரையும் உடனடியாக பாதுகாப்பாக கரைக்கு கொண்டுவந்து ஜப்பானிய வைத்தியசாலையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜப்பான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இரண்டு ஆஸ்திரேலியர்களை விட ஹொங்கொங் மற்றும் ஜப்பான் நாடுகளை சேர்ந்த தலா மூவரும் ஒரு அமெரிக்கரும் பிலிப்பீன்ஸ் நாட்டவர் ஒருவரும் இவ்வாறு நோய்த்தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்கள் என ஜப்பானிய சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
நோய்த்தொற்றுக்குள்ளானவர்கள் கரைக்கு கொண்டுவரப்படவுள்ளபோதும், தற்போது ஜப்பானிய துறைமுகத்தில் உள்ள குறிப்பிட்ட உல்லாசக்கப்பலில் உள்ளவர்கள் அடுத்த 14 நாட்களுக்கு கப்பலிலேயே தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக்கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று ஜப்பான் அறிவித்துள்ளது.
Diamond Princess என்ற இந்த உல்லாசக்கப்பல் கடந்த ஜனவரி 25 ஆம் திகதி ஹொங்கொங்கிலிருந்து புறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Share
