சிட்னியில் ஆண்டு 11-இல் கல்விகற்கும் மாணவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து குறித்த மாணவன் கல்வி கற்கும் பாடசாலை இன்று மூடப்பட்டுள்ளது.
Epping ஆண்கள் உயர்தர பாடசாலையே இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலை மாணவர்களை வைரஸ் தாக்கத்திலிருந்து தடுப்பதற்கான நடைமுறைகள் குறித்து ஆய்வுசெய்வதற்காகவே இன்றையதினம் மட்டும் பாடசாலை மூடப்பட்டுள்ளதாகவும், எவரும் இதுகுறித்து அச்சம்கொள்ளத் தேவையில்லை எனவும் நியூ சவுத் வேல்ஸ் மாநில சுகாதார மற்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இன்றைய தினம் பாடசாலை மூடப்படுவதனால் சுமார் 1200 மாணவர்களின கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்றபோதிலும், நிலைமைகள் தொடர்பில் ஆய்வு செய்வது அவசியம் என சுட்டிக்காட்டியுள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநில சுகாதார அமைச்சர் Brad Hazzard, மாணவர்களை வீடுகளில் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை தற்போது 25 என தெரிவிக்கப்படும் அதேநேரம் இவ்வெண்ணிக்கை ஒரே வாரத்தில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share
