நாடு முழுவதிலும் toilet பேப்பர் கொள்வனவுக்கு மக்கள் முண்டியடித்துவரும் பின்னணியில் Northern Territory-யிலிருந்து வெளிவரும் NT News பத்திரிகை விநோத உதவி ஒன்றினை வழங்கியது.
கடந்த வாரம் தனது பத்திரிகையில் 8 பக்கங்களை வெறுந்தாள்களாக அச்சிட்டு அவற்றை toilet பேப்பராக பயன்படுத்துமாறு அப்பத்திரிகை குறிப்பிட்டிருந்தது.
கடந்த வியாழக்கிழமை வெளியான NT News பத்திரிகையின் 8 பக்கங்கள் வெறுந்தாள்களாக பிரசுரிக்கப்பட்டமை தொடர்பாக வெளியான குறிப்பில் - "உங்களின் toilet பேப்பர் முடிவடைந்துவிட்டதா? பதற்றம் வேண்டாம், NT News உங்கள் தொடர்பில் கரிசனை கொள்கிறது" - என்று அச்சிடப்பட்டிருந்தது.
கொரோனா வைரஸ் பரவலைத்தொடர்ந்து நாடு முழுவதும் toilet பேப்பர் கொள்வனவு தொடர்கின்றநிலையில், NT News பத்திரிகை மேற்கொண்டுள்ள இந்த விநோதமான நடவடிக்கை சர்வதேச செய்தி ஊடகங்களையும் சென்றடைந்திருக்கிறது.
Toilet பேப்பர் வாங்குவதற்காக பல்பொருள் அங்காடிகளில் முண்டியடிக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் முறுகல் - கைகலப்புக்கள் ஏற்பட்டு காவல்துறை தலையிடவேண்டியதுவரை நிலைமை மோசமடைந்து சென்றுகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Share
