கொரொனோ வைரஸ் உலகை அச்சுறுத்தும் நோயா?
ஆம். கொரொனோ வைரஸ் என்பது உலகு சந்திக்கும் அவசரநிலை என்று உலக சுகாதார நிறுவனம் World Health Organization அறிவித்துள்ளது.
கொரொனோ வைரஸ் காரணமாக சீனா செல்வதற்கு நாடுகள் தடை விதித்துள்ளனவா?
இல்லை. ஆனால் சீன செல்லவேண்டுமா என்று ஒருமுறைக்கு இருமுறை நான்கு யோசியுங்கள் என்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் தங்களது குடிமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளன.
கொரொனோ வைரஸ் காரணமாக சீனா செல்வதில்லை என்று விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளனவா?
ஆம். இல்லை. British Airways உள்ளிட்ட சில விமான நிறுவனங்கள் தாங்கள் சீனா செல்வதில்லை என்று அறிவித்துள்ளன. ஆனால் பல விமான நிறுவனங்கள் சீனா சென்றுகொண்டுதான் உள்ளன.
கொரொனோ வைரஸ்க்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதா?
இதுவரை இல்லை. இதற்கான மருந்தை தாம் இன்னும் மூன்று மாதத்திற்குள் பரிசோதனை செய்துவிடுவோம் என்று அமெரிக்காவின் University of Washingtonஅறிவித்துள்ளது.
மனிதர்களுக்கு வரும் கொரொனோ வைரஸ் வீடுகளில் வளர்க்கப்படும் நாய் மற்றும் பூனைகளுக்கும் பரவுமா?
இல்லை. அதற்கான வாய்ப்பு இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் விற்பனையாகும் Fortune cookies மற்றும் wagyu beef போன்ற சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவுப்பொருட்களில் கொரோனா வைரஸ் கலந்திருக்குமா?
இல்லை. இதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என மெல்பேர்ன் பல்கலைக்கழக infectious diseases epidemiologist James McCaw தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸை உருவாக்கியவர் பிரபல தொழிலதிபர் பில் கேட்ஸ் என்று கூறப்படுகிறதே. இது உண்மையா?
நிச்சயம் உண்மையில்லை. இது போலியான செய்தி.
கொரோனா வைரஸ் ஒரு bio weapon – உயிரியல் போராயுதம் எனவும் இதனை அமெரிக்காதான் திட்டமிட்டு பரப்பியது என்றும் சொல்கிறார்களே.
இது தவறான தகவல்.
நாட்டில் வேகமாக வளரும் மக்கள்தொகையை குறைப்பதற்கு சீன அரசு மேற்கொண்டுள்ள இரகசிய நடவடிக்கைதான் கொரோனா வைரஸ் என்கிறார்களே. உண்மையா?
இது ஆதாரமற்ற செய்தி.
கொரோனா வைரஸ் தாக்காமல் இருப்பதற்கு மக்கள் உப்பு கலந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தாலே போதும் என்கிறார்களே. செய்யலாமா?
இல்லை. வாய் கொப்பளித்தால் மாடுமே நீங்கிவிடுமளவு எளிதானதல்ல கொரோனா வைரஸ்.
Bleach-ஐ அருந்தினால் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றிலிருந்து விடுபட இயலுமா?
இயலாது. இதற்கு உறுதியான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
