தனது மகனின் பிறந்தநாளுக்கு magician-மந்திரவாதியை அழைத்து வீட்டுக்கு அருகிலிருந்த பூங்காவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்தியவருக்கு குறிப்பிட்ட பூங்கா அமைந்துள்ள கவுன்ஸில் அபராதம் விதித்துள்ளது.
Liability insurance செலுத்தி கவுன்ஸிலிடம் உரிய அனுமதியை பெற்றுக்கொள்ளாமல் இந்த கொண்டாட்டத்தை நடத்தியத்தியதாகவும் இதற்காக 187 டொலர்கள் அபராதம் விதிக்கப்படுவதாகவும் இதுதொடர்பில் முன்னதாகவே எச்சரிக்கப்பட்டிருந்ததாகவும் கவுன்ஸில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச்சம்பவம் அடிலெய்ட்டில் இடம்பெற்றுள்ளது.
அடிலெய்ட் Tusmore பூங்காவில் மந்திரவாதியை அழைத்துவந்து நடத்தப்பட்ட பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு இவ்வாறு கவுன்ஸில் தண்டப்பணம் விதித்துள்ளதாக, நிகழ்வை ஏற்பாடு செய்த சிறுவனின் தாயார் தெரிவித்திருக்கிறார்.
தனது மகனின் பிறந்தநாள் நிகழ்வுக்கு வந்த 14 சிறுவர்களை பூங்காவிற்கு அழைத்துச்சென்று தான் இந்த நிகழ்வை நடத்தியதாகவும் அங்கு மந்திரவாதியை அழைத்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியதாகவும் குறிப்பிட்ட தாயார், கவுன்ஸில் அனுப்பியுள்ள இந்த தண்டப்பண அறிவித்தலால் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறியுள்ளார்.
14 சிறுவர்களுடன் ஒரு பிறந்தநாள் நிகழ்ச்சியை நடத்துவதற்கு அனுமதியளிக்காத இடத்தை, பொதுமக்களுக்கான பூங்கா என்று அறிவித்துக்கொள்வதில் என்ன நியாயமிருக்கிறது - என்று அவர் வினவியுள்ளார்.
