நாட்டிலுள்ள 5 -11 வயது குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!

கொரோனா வைரஸ் குறித்து ஜனவரி மாதம் 10ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

La vaccination est ouverte pour les enfants de 5 à 11 ans.

Source: AAP Image/Bianca De Marchi

  • நாட்டிலுள்ள 5 முதல் 11 வயது வரையான குழந்தைகள் தமக்கான முதல்சுற்று கோவிட் தடுப்பூசியை இன்றிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
  • தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவுகளை மேற்கொள்வதில் சில பெற்றோர் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி போதிய கையிருப்பு உள்ளதாக Lieutenant General John Frewen தெரிவித்தார்.
  • நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கோவிட் தொற்று காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2030 ஆக அதிகரித்துள்ளது. 159 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர்.
  • விக்டோரிய மாநிலத்தில் 818 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 
  • குயின்ஸ்லாந்தில் 419 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 21 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர். 
  • குயின்ஸ்லாந்தில், மாணவர்கள் திட்டமிட்டதை விட இரண்டு வாரங்கள் கழித்து-ஜனவரி 24க்குப் பதிலாக பிப்ரவரி 7 அன்று- பள்ளிக்குத் திரும்புவார்கள்.
  • விக்டோரியா மாநிலத்தில் குறிப்பிட்ட சில அத்தியாவசியத்துறைகளில் பணிபுரிபவர்களுக்கு booster தடுப்பூசி கட்டாயமாக்கப்படுகிறது.
  • மேலதிகமாக 50 மில்லியன் rapid antigen testing kits-ஐ கொள்வனவு செய்வதாக நியூ சவுத் வேல்ஸ் Premier Dominic Perrottet அறிவித்துள்ளார்.
  • Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை Service NSW app-இல் பதிவு செய்வதற்கு இந்த வாரத்தின் பிற்பகுதியிலிருந்து அனுமதிக்கப்படும் என NSW அரசு கூறியுள்ளது.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப்பரவல் ஊடாக புதிதாக 20,293 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 18 பேர் மரணமடைந்தனர். Antigen சோதனை முடிவுகள் சேர்க்கப்படவில்லை. 

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 34,,808 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இருவர்  மரணமடைந்தனர். Antigen சோதனை முடிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

டாஸ்மேனிய மாநிலத்தில் புதிதாக 1,218 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 9,581 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

ACT-இல் புதிதாக 938 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

NSW பயணம் குறித்த தரவுகள்  மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

VIC பயணம் குறித்த தரவுகள்வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

3 min read

Published




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now