SKIP TO MAIN CONTENT

கொரோனா சோதனைக்கு $50 தருமாறு கோரும் போலி தொலைபேசி அழைப்புக்கள்!

Scam
Source: iStockphoto

1 min read

Published


Skip to article content

'கொரோனா தொற்றுள்ளவருக்கு அருகில் சென்று வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், வைரஸ் சோதனையை மேற்கொள்ள வேண்டும். மேற்படி சோதனைக்கான home test kit-ஐ பெற்றுக்கொள்ள  50 டொலர்களை உடனடியாக செலுத்தவும்'- என்று கோரும் இணையத்திருடர்களின் தொலைபேசி வழியான மோசடி ஆஸ்திரேலியாவில் அதிகரித்திருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் ஆரம்பித்தது முதல் ஆஸ்திரேலியாவில் சுமார் 2.4 மில்லியன்  டொலர்கள் இப்படியான தொலைபேசி வழியான திருடர்கள் மூலம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆரம்பமாகியுள்ள இந்தப்புதுவித திருட்டு லண்டனிலிருந்து முன்னெடுக்கப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கான தடுப்பூசியை நோக்கி உலக அளவிலான மருத்துவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற இவ்வேளையில், அப்பாவி மக்களை இலக்குவைத்து இணையத்திருடர்கள் மேற்கொள்ளும் இவ்வகையான திருட்டுக்கள் எதிர்காலத்தில் பாரதூரமாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now