கொரோனா வைரஸ் COVID-19 தொற்று பாரபட்சமின்றி அனைவரையும் தாக்கும் என்றபோதிலும் இத்தொற்று ஏற்பட்ட சிலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்படாமலே போகலாம். இன்னும் சிலருக்கு இலேசான அறிகுறிகள் மாத்திரம் ஏற்பட்டு விரைவில் குணமடையலாம். மற்றவர்கள் மிகக்கடுமையாக விரைவாக நோய்வாய்ப்படலாம்.
அந்தவகையில் கொரோனா வைரஸ் தொற்று கீழ்க்காணும் பிரிவினருக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
ஆஸ்துமா நோய் உள்ளவர்கள்
இது குறித்த மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள: https://www.nationalasthma.org.au/news/2020/covid-19-and-your-asthma-patients
சுவாசப்பை சம்பந்தமான நோய் உள்ளவர்கள்
இது குறித்த மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள: https://www.healthdirect.gov.au/lung-conditions
இதயம் சம்பந்தப்பட்ட நோய்நிலைமைகளால் பாதிக்கப்பட்டவர்கள்
இது குறித்த மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள: https://www.heartfoundation.org.au/your-heart/coronavirus-covid-19-and-cardiovascular-disease
நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள்
இது குறித்த மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள: https://www.diabetesaustralia.com.au/be-prepared
ஈரல் சம்பந்தப்பட்ட நோய்நிலைமைகளால் பாதிக்கப்பட்டவர்கள்
இது குறித்த மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள:
Hepatitis : https://www.hepatitisaustralia.com/Handlers/Download.ashx?IDMF=e9924223-888a-47a3-8295-5add820aa204
Hepatitis B : https://ashm.org.au/covid-19/clinical-care/hbv/
Hepatitis C:https://ashm.org.au/covid-19/clinical-care/hcv/
சிறுநீரக கோளாறுடையவர்கள்
இது குறித்த மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள: https://www.kidney.org/coronavirus/kidney-disease-covid-19, https://kidney.org.au/cms_uploads/docs/acute-kidney-injury-sick-day-plan-for-healthcare-professionals-sheet---kidney-health-australia.pdf
புற்றுநோய்க்கு சிகிச்சைபெற்றுக்கொண்டிருப்பவர்கள்
இது குறித்த மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள: https://www.cancer.org.au/
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
