ஆஸ்திரேலியா முழுவதும் கோவிட் தொற்று காரணமாக மேலும் 52 பேர் மரணம்!

கொரோனா வைரஸ் குறித்து மே மாதம் 13ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

People wait outside a COVID testing clinic South of Brisbane, Wednesday, January 5, 2022. (AAP Image/Jono Searle) NO ARCHIVING

Queensland's hospitalisation number has declined from 597 on 13 April to 407 on 13 May. Source: AAP Image/Jono Searle

NSW, விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா, டஸ்மேனியா மற்றும்  குயின்ஸ்லாந்தில் கோவிட் தொடர்பிலான மேலும் 52 இறப்புகள் பதிவாகியுள்ளன.

மேற்கு ஆஸ்திரேலியாவில் ஒரேநாளில் 15,565 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  நேற்றையதினம் பதிவான தொற்று எண்ணிக்கையைவிடவும் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது.   

ACT-இல் வசிப்பவர்கள், உரிமம் பெற்ற இடங்கள், பதிவுசெய்யப்பட்ட கிளப்புகள், இரவு விடுதிகள், strip clubs, விபச்சார விடுதிகள் மற்றும் டிக்கெட் இல்லாத நிகழ்வுகளில், மே 13 அன்று இரவு 11.59 மணி முதல் check-in செய்யவேண்டியதில்லை.

வடகொரியாவில் குறைந்தது 6 பேர் கோவிட் தொற்றால் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் பரவல் ஆரம்பித்த நாளிலிருந்து இதுவரை 1 மில்லியன் பேர் அமெரிக்காவில் மரணமடைந்துள்ள நிலையில்,  "தொற்றுநோய் இன்னும் முடிவடையவில்லை" என்று அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக  12,020 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 13 பேர் மரணமடைந்தனர். 

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 13,181  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 18 பேர் மரணமடைந்தனர். 

டஸ்மேனியாவில் புதிதாக 1,118 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இருவர்  மரணமடைந்தனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 6,555  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 12 பேர் மரணமடைந்தனர்.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 15,565 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூவர் மரணமடைந்தனர். (இம்மரணங்கள் முன்னைய தேதிகளில் நேர்ந்துள்ளன). 

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 4,616  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூவர் மரணமடைந்தனர். 

ACT- இல் புதிதாக 1,217  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


Share

1 min read

Published




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now