SKIP TO MAIN CONTENT

விக்டோரியா மாநிலத்திலுள்ள அனைவருக்கும் நாளை முதல் இலவச FLU தடுப்பூசி!

கொரோனா வைரஸ் மற்றும் FLU குறித்து மே மாதம் 31ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Flu Vaccine
Source: AAP Image/David Cheskin

3 min read

Published

Updated



Skip to article content

விக்டோரியா மாநிலத்தில் 6 மாதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட, அனைத்து வயதுடையோருக்கும் இலவச FLU தடுப்பூசிகள், நாளை முதல் ஜூன் 30 வரை வழங்கப்படுகின்றன. 

மூவாயிரம் GP கிளினிக்குகள்  மற்றும் மருந்தகங்களிடமிருந்து இதனை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

விக்டோரியாவில் கடந்த வாரம் FLU தொற்றாளர்களின் எண்ணிக்கையில் 30 சதவீதத்திற்கும் கூடுதலான அதிகரிப்பு காணப்பட்ட பின்னணியில், அரசு இவ்வறிவித்தலை விடுத்துள்ளது.

குயின்ஸ்லாந்து மாநிலம் ஏற்கனவே இலவச FLU தடுப்பூசிகளை வழங்கிவரும் அதேநேரம் நியூ சவுத் வேல்ஸ், மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களும் இதுகுறித்த அறிவித்தலை விடுத்துள்ளன.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 56 இறப்புகள் பதிவாகியுள்ளன.

முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது, ஆஸ்திரேலியா முழுவதும் கோவிட் நோய்த்தொற்றாளர்கள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுகிறது.

ACT-இல் 93 பேர் கோவிட் தொற்று காரணமாக மருத்துவமனைகளில் உள்ளதாகப் பதிவாகியுள்ளது. ஏப்ரல் 4ஆம் தேதிக்குப் பிறகு இவ்வெண்ணிக்கை மிக அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜூன் தொடக்கத்தில் மற்றொரு கோவிட் அலை தாக்கக்கூடுமென முன்னணி தொற்றுநோயியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். Omicron-இன் BA.2 மாறுபாட்டால் ஏற்படும் நோய்த்தொற்றுகள் ஒரு நிலையை அடைந்துவிட்டதாகவும், புதிய வகைகளான BA.4 மற்றும் BA.5 ஆகியவை புதிய தொற்றுகளை அதிகரிக்கும் என்றும் தொற்றுநோயியல் நிபுணர்களை மேற்கோள்காட்டி AFR-இன் அறிக்கை தெரிவிக்கிறது.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக  7,342 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 19 பேர் மரணமடைந்தனர். 

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 9,595  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 20 பேர் மரணமடைந்தனர். 

டஸ்மேனியாவில் புதிதாக 829 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  ஒருவர் மரணமடைந்தார்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 4,397 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 11 பேர் மரணமடைந்தனர்.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 8,201 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  4 பேர் மரணமடைந்தனர்.(இம்மரணங்கள் முன்னைய தேதிகளில் நேர்ந்துள்ளன).  

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 2,689  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

ACT- இல் புதிதாக  673 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.

NT-இல் புதிதாக  265 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

ACT   New South Wales   Northern Territory   Queensland   South Australia  Tasmania   Victoria    Western Australia

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

ACT   New South Wales   Northern Territory   Queensland   South Australia   Tasmania  Victoria   Western Australia 

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: healthdirect.gov.au/covid19

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: servicesaustralia.gov.au

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்: mhcs.health.nsw.gov.au

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: SBS Coronavirus portal

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now