விக்டோரியாவில் 24 பேர், மேற்கு ஆஸ்திரேலியாவில் 11 பேர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 25 பேர் என நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 72 இறப்புகள் பதிவாகியுள்ளன.
TouchBio SARS-CoV-2 & FLU A/B Antigen Combo Test மற்றும் Fanttest COVID-19/Influenza A&B Antigen Test Kit ஆகியவற்றை TGA-சிகிச்சை பொருட்கள் நிர்வாகம் அங்கீகரித்துள்ளது.
இந்த சுய பரிசோதனை உபகரணங்கள் கோவிட்-19 மற்றும் Influenza வைரஸ்கள் இரண்டையும் கண்டறியும். இவை Influenza A மற்றும் B இருப்பதைக் குறிக்க கூடுதல் கோடு ஒன்றைக் கொண்டுள்ளன.
வெள்ளிக்கிழமைக்குப் பிறகு தினசரி கோவிட் அறிக்கைகளையும் எண்ணிக்கைகளையும் மாநிலங்களும் பிராந்தியங்களும் வழங்காது.
அதற்கு பதிலாக, அவர்கள் செப்டம்பர் 16 முதல் வாராந்திர அறிக்கையை வெளியிடுவார்கள்.
இந்த மாத தொடக்கத்தில் நடந்த மாநில மற்றும் பிராந்திய சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
செப்டம்பர் 4 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், புதிய வாராந்திர கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 12 சதவீதமும், இறப்புகள் ஐந்து சதவீதமும் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தனது சமீபத்திய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் இந்த போக்குகள் தொடரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று WHO இன் director-general Tedros Adhanom Ghebreyesus எச்சரித்தார்.
கடந்த வாரம் ஒவ்வொரு 44 வினாடிகளுக்கும் ஒருவர் கோவிட்-19 நோயால் இறந்ததாக அவர் கூறினார்.
COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 3,334 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 25 பேர் மரணமடைந்தனர்.
விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 2,102 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 24 பேர்மரணமடைந்தனர்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 1,564 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 11 பேர் மரணமடைந்தனர்.
மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 1.088 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 12 பேர் மரணமடைந்தனர்.
டஸ்மேனியாவில் புதிதாக 166 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ACT- இல் புதிதாக 179 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
NT- இல் புதிதாக 89 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும்பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய:
உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதைஅறிந்துகொள்ள:
உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்: mhcs.health.nsw.gov.au
உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: SBS Coronavirus portal
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரைசெல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
——————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
