ஆஸ்திரேலியாவில் கோவிட் காரணமாக மரணமடைந்தோர் எண்ணிக்கை பத்தாயிரத்தை எட்டுகிறது

கொரோனா வைரஸ் குறித்து ஜுலை மாதம் 01ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

AAP Image/Mick Tsikas

People queue at Centrelink at Darlinghurst in Sydney. (file) Source: AAP Image/Mick Tsikas

விக்டோரியாவில் 12 பேர், குயின்ஸ்லாந்தில் 6 பேர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 9 பேர் என நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 33 இறப்புகள் பதிவாகியுள்ளன.

2020 ஜனவரியில் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து ஆஸ்திரேலியாவில் 9,897 கோவிட் காரணமாக பேர் இறந்துள்ளதாக தரவு காட்டுகிறது. வார இறுதியில் இந்த எண்ணிக்கை 10,000ஐத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுகாதார அமைச்சர் Mark Butler இன்று மாநில மற்றும் பிராந்திய சுகாதார அமைச்சர்களை சந்திக்கிறார். நோய்த்ததொற்றால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கான சிகிச்சைகள் தொடர்பில் அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு ஆஸ்திரேலியாவில் புதிய தொற்றாளர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், புதிய கோவிட் அலை பற்றி அமைச்சர் Mark Butler எச்சரித்துள்ளார்.

Pandemic Leave Disaster Payment  திட்டத்தை ஆஸ்திரேலிய அரசு இன்று முதல் முடிவுக்கு கொண்டுவருகிறது. இந்த திட்டம் ஆகஸ்ட் 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு $1.89 பில்லியனுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது.

இலவச flu தடுப்பூசிகளுக்கான காலக்கெடுவை குயின்ஸ்லாந்து ஜூலை 17 வரை நீட்டித்துள்ளது.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக  10,930 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 9 பேர் மரணமடைந்தனர். 

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 8,057  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 12 பேர் மரணமடைந்தனர். 

டஸ்மேனியாவில் புதிதாக 1303 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 5,313 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6 பேர் மரணமடைந்தனர்.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 5,072 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இருவர் மரணமடைந்தனர்.

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 2,781  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 3 பேர் மரணமடைந்தனர்.

ACT- இல் புதிதாக  1169 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.

NT-இல் புதிதாக  302 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

ACT   New South Wales   Northern Territory   Queensland   South Australia  Tasmania   Victoria    Western Australia

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

ACT   New South Wales   Northern Territory   Queensland   South Australia   Tasmania  Victoria   Western Australia 

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: healthdirect.gov.au/covid19

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: servicesaustralia.gov.au

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்: mhcs.health.nsw.gov.au

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: SBS Coronavirus portal

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

3 min read

Published

Updated




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now