விக்டோரியாவில் 37 பேர், குயின்ஸ்லாந்தில் 27 பேர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 34 பேர் என நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 125 இறப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் 46,769 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தெற்கு ஆஸ்திரேலியாவில் 13 ஏப்ரல் 2022 முதல் 27 ஜூலை 2022 வரை பதிவான 17 இறப்புக்களும் இவ்வெண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவின் தலைமை மருத்துவ அதிகாரி Paul Kelly, குரங்கு அம்மையை (MPX) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொற்று நோயாக அறிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பு குரங்கு அம்மையை சர்வதேசளவில் கரிசனைக்குரிய அல்லது கோவிட் போன்ற தொற்றுநோய்க்கான பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்ததைத் தொடர்ந்து தலைமை மருத்துவ அதிகாரியின் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது
கோவிட்-19 ஐ விட MPX குறைவான தீங்கு விளைவிப்பதாகவும், கோவிட்-19 போன்று இது பரவுவதில்லை என்றும் பேராசிரியர் கெல்லி கூறினார்.
வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியா திரும்பிய 44 பயணிகளில் குரங்கு அம்மைத் தொற்று  கண்டறியப்பட்டுள்ளது.
78 நாடுகளில் இருந்து 18,000 குரங்கு அம்மைத் தொற்றாளர்கள் மற்றும் ஐந்து இறப்புகள் பதிவாகியுள்ளதாக WHO இன் Director-General Tedros Adhanom Ghebreyesus தெரிவித்துள்ளார். 
ஆஸ்திரேலியாவில் இனங்காணப்பட்டுள்ள பெரும்பாலான குரங்கு அம்மைத் தொற்றாளர்கள் 21 முதல் 40 வயதுடையவர்கள்.
விக்டோரிய மாநிலம் கடந்த ஆண்டு 700 paramedics-ஐ பணியில் சேர்த்துக்கொண்டதாகவும் சுகாதார அமைப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்க இந்த ஆண்டும் அதே எண்ணிக்கையில் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளதாகவும் விக்டோரியா Premier Daniel Andrews தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஓமிக்ரான் அலை மற்றும் flu தொற்றுகளை சமாளிக்க அடிலெய்டில் உள்ள Kilkenny-யில் ஐந்தாவது respiratory clinic-ஐ தெற்கு ஆஸ்திரேலிய மாநிலம் திறந்துள்ளது.
ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் கொரியாவை உள்ளடக்கிய மேற்கு பசிபிக் பிராந்தியத்தில், முந்தைய வாரத்தை விட கோவிட்-19 தொற்றுகள் 52 சதவீதம் அதிகரித்துள்ளதாக WHO தனது சமீபத்திய வாராந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உலகளவில் அதிக வாராந்திர நோய்த்தொற்றுகளைப் பதிவு செய்துள்ளன.
COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக  15,704 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 34 பேர் மரணமடைந்தனர். 
விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 12,154  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 37 பேர் மரணமடைந்தனர். 
குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 7,364 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 27 பேர் மரணமடைந்தனர்.
மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 4,961 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  5 பேர் மரணமடைந்தனர். 
தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 3,957  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  17 பேர் மரணமடைந்தனர். 
டஸ்மேனியாவில் புதிதாக 1175 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நால்வர் மரணமடைந்தனர். 
ACT- இல் புதிதாக  1000 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  ஒருவர் மரணமடைந்தார்.
NT-இல் 454  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
ACT   New South Wales   Northern Territory   Queensland   South Australia  Tasmania   Victoria    Western Australia
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
ACT   New South Wales   Northern Territory   Queensland   South Australia   Tasmania  Victoria   Western Australia 
ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: healthdirect.gov.au/covid19
உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: servicesaustralia.gov.au
உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: SBS Coronavirus portal
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
