ஆஸ்திரேலியா முழுவதும் கோவிட் தொற்று காரணமாக மேலும் 68 பேர் மரணம்!

கொரோனா வைரஸ் குறித்து மே மாதம் 24ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

People walk along Bourke Street Mall in Melbourne, Sunday, March 20, 2022. (AAP Image/Diego Fedele) NO ARCHIVING

People walk along Bourke Street Mall in Melbourne, Sunday, March 20, 2022. (AAP Image/Diego Fedele) NO ARCHIVING Source: AAP Image/Diego Fedele

NSW, விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா, மற்றும்  குயின்ஸ்லாந்தில் கோவிட் தொடர்பிலான மேலும் 68 இறப்புகள் பதிவாகியுள்ளன.

நாடு முழுவதும் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வார இறுதி மற்றும் திங்கட்கிழமை சரிவு காணப்பட்டபோதிலும் இவ்வெண்ணிக்கை  ஆஸ்திரேலியா முழுவதும் அதிகரித்துள்ளது.

தெற்கு ஆஸ்திரேலிய பெற்றோர் தங்கள் குழந்தைக்கு RAT சோதனையில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டால், அதனை 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேநேரம் கோவிட்-19 அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகளின் RAT முடிவு எதிர்மறையாக காணப்படும்பட்சத்தில், அவர்களுக்கு PCR சோதனையை மேற்கொள்ளுமாறு மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.

NSW மாநிலத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஒருபுறமிருக்க, FLU-ஆல் பாதிக்கப்பட்டவர்களும் அதிகரித்துவரும் நிலையில், மருத்துவமனை பணியாளர்கள் பலர் சுகயீனம் காரணமாக ஊதியமற்ற விடுப்பு எடுப்பதும்  அதிகரித்துள்ளதால், மருத்துவமனைகள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் Brad Hazzard தெரிவித்துள்ளார். மேலும் காலதாமதம் செய்யாமல் FLU தடுப்பூசி போடுமாறு மக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஆறு மாதங்களுக்கும் மேலான வயதுடைய அனைவருக்கும் இலவச FLU தடுப்பூசிகள் இன்று முதல் வழங்கப்படுகின்றன. குயின்ஸ்லாந்து மாநிலத்தவர்கள் ஜூன் 30 வரை தங்கள் GP அல்லது மருந்தகத்திடமிருந்து இதனை  இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

கோவிட்-19 தடுப்பூசி தகவல்  kiosks மே 29 வரை பின்வரும்  shopping centre-களில் இயங்குகின்றன.

NSW - Tweed Heads - Tweed City Shopping Centre

NSW - Bankstown - Roselands Shopping Centre

QLD - Loganholme - Logan Hyperdome

QLD - Beenleigh - Beenleigh Marketplace

QLD - Southport - Australia Fair Shopping Centre

VIC - Cardinia - Pakenham Central

SA - Salisbury Downs - Hollywood Plaza

SA -Adelaide - Munno Para Shopping Centre

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக  8,751 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 14 பேர் மரணமடைந்தனர். 

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 11,656  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 16 பேர் மரணமடைந்தனர். 

டஸ்மேனியாவில் புதிதாக 913 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 5,118 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 18 பேர் மரணமடைந்தனர்.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 12,114 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  6 பேர் மரணமடைந்தனர்.(இம்மரணங்கள் முன்னைய தேதிகளில் நேர்ந்துள்ளன).  

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 3,482  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 14 பேர் மரணமடைந்தனர்(இம்மரணங்கள் முன்னைய தேதிகளில் நேர்ந்துள்ளன).

ACT- இல் புதிதாக  820 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

NT-இல் புதிதாக  236 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

ACT   New South Wales   Northern Territory   Queensland   South Australia  Tasmania   Victoria    Western Australia

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

ACT   New South Wales   Northern Territory   Queensland   South Australia   Tasmania  Victoria   Western Australia 

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: healthdirect.gov.au/covid19

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: servicesaustralia.gov.au

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்: mhcs.health.nsw.gov.au

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: SBS Coronavirus portal

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

3 min read

Published




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now