ஆஸ்திரேலிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தல் நடைமுறைகளில் மாற்றம்!

கொரோனா வைரஸ் குறித்து நவம்பர் மாதம் 28ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Minister for Health Greg Hunt and Therapeutic Goods Administration (TGA) Deputy Secretary Professor John Skerritt arrive at a press conference at Parliament House in Canberra, Wednesday, October 27, 2021. (AAP Image/Mick Tsikas) NO ARCHIVING

Minister for Health Greg Hunt says situation on international border restrictions can change as more health advice is received. Source: AAP

  • சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையைத் தொடர்ந்து Omicron வைரஸ் திரிபுக்கு எதிராக ஆஸ்திரேலியா தனது எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது.
  • திரிபடைந்த வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள ஒன்பது நாடுகளில் இருந்து வந்த 54 பயணிகள், 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 
  • சுகாதார அதிகாரிகள் பிரதமர் Scott Morrison-இடம் நிலைமைகள் தொடர்பில் விளக்கமளித்துள்ளதாகவும், தற்போதைய நடவடிக்கைகள் திருப்திகரமாக இருப்பதாகவும் சுகாதார அமைச்சர் Greg Hunt தெரிவித்துள்ளார்.
  • சிட்னி திரும்பிய இரண்டு சர்வதேச பயணிகளுக்கு Omicron தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
  • தென்னாப்பிரிக்க நாடுகளில் இருந்து NSW, விக்டோரியா மற்றும் ACT திரும்பும் அனைத்து பயணிகளும்(தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மற்றும் போடாதவர்கள்) 14 நாட்களுக்கு கட்டாயமாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும். அதேநேரம் ஏனைய நாடுகளிலிருந்து வரும் அனைத்துப் பயணிகளும் ஆகக்குறைந்தது 72 மணித்தியாலங்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டுமென இம்மூன்று மாநில மற்றும் பிராந்திய அரசுகள் அறிவித்துள்ளன. 
  • அதிக ஆபத்துள்ள இடங்களிலிருந்து திரும்பும் அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை தெற்கு ஆஸ்திரேலியா கட்டாயமாக்கியுள்ளது.
  • Omicron திரிபு தொடர்பிலான அச்சுறுத்தலுக்கு மத்தியில், அனைவரையும் அமைதி காக்குமாறு உலக சுகாதார நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
  • இங்கிலாந்து, இத்தாலி மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் Omicron தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். 

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,061 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் 4  பேர் உயிரிழந்துள்ளனர். 

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 185 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

ACT-இல் சமூகப் பரவல் மூலம், புதிதாக 7 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

NSW பயணம் குறித்த தரவுகள்  மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

VIC பயணம் குறித்த தரவுகள்வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

3 min read

Published

Updated

By SBS/ALC Content

Source: SBS



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now