கோவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு! Booster தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தல்!!

கொரோனா வைரஸ் குறித்து மார்ச் மாதம் 18ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

A woman is seen receiving her COVID-19 vaccination in Melbourne.

ATAGI has updated its advice on COVID-19 vaccination. Source: AAP

  • அடுத்துவரும் வாரங்களில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்னும் booster தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாத ஆஸ்திரேலியர்கள், அதனை விரைவில் போட்டுக்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
  • தற்போது பரவிவரும் Omicron BA.2 துணை திரிபு, ஏற்கனவே உள்ள BA.1 ஐ விட அதிகமாக பரவக்கூடியது என கருதப்படுவதால், கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரக்கூடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
  • 16 வயதுக்கு மேற்பட்ட ஆஸ்திரேலியர்களில் 66 சதவீதம் பேர், கோவிட் தடுப்பூசியின் இரண்டு சுற்றுக்களுக்கு மேல் பெற்றுள்ளதாக சுகாதாரத் துறை தரவு காட்டுகிறது.
  • Booster தடுப்பூசிகள், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கட்டாயமில்லை என்றாலும், கோவிட்டுக்கு எதிராக நாம் பெற்றுக்கொண்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் booster தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகின்றது.
  • புதிய BA.2 துணை திரிபானது, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தை அதன் இரண்டாவது Omicron அலையை நோக்கி கொண்டு செல்வதாக, தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் Adrian Esterman தெரிவித்துள்ளார்.
  • சீனாவில் தற்போது எளிதில் பரவக் கூடிய Omicron வகை கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து, அந்நாட்டின் பல நகரங்களில் முழுமையாகவும், இன்னும் பல நகரங்களில் பகுதி அளவிலும் முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
  • அறவே நோய்த்தொற்றுச் சம்பவங்கள் இல்லாத நிலையை உறுதிசெய்ய முயலும் சீனாவுக்கு, தற்போதைய பரவல் கடும் சவாலை  ஏற்படுத்தியுள்ளது.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

NSW, விக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்தில் கோவிட் தொடர்பிலான மேலும் 26 இறப்புகள் பதிவாகியுள்ளன.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மேலும் 20,050 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6 பேர் மரணமடைந்தனர். 1,060 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 32 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 9,036 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 9 பேர் மரணமடைந்தனர். 199 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 28 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

டஸ்மேனியாவில் புதிதாக 1,779 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 23 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

ACT- இல் புதிதாக 1,123 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  37 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 6,103 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 11 பேர் மரணமடைந்தனர். 245 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 20 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 6,176 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 134 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

ACT   New South Wales   Northern Territory   Queensland   South Australia  Tasmania   Victoria    Western Australia

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

ACT   New South Wales   Northern Territory   Queensland   South Australia   Tasmania  Victoria   Western Australia 

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: healthdirect.gov.au/covid19

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: servicesaustralia.gov.au

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்: mhcs.health.nsw.gov.au

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: SBS Coronavirus portal

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

3 min read

Published




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now