NT பிராந்தியத்தில் புதிய தொற்றாளர் அடையாளம், முடக்கநிலை அறிமுகம்

கொரோனா வைரஸ் குறித்து நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Flights between NSW and Victoria have resumed without any COVID-19 restrictions, as the border between the two states reopens.

Source: AAP


நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாநிலங்களுக்கிடையே எல்லைகள் முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளது.  உலகில் மிக அதிக விமானங்கள் பறக்கும் பாதை மீண்டும் உயிர் பெற்றுள்ளது. குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைகின்றன.

Northern Territory பிராந்தியத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக ஒருவருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  இந்தப் பிராந்தியத்தில் சமூகப் பரவல் மூலம் ஏற்பட்ட முதல் தொற்றாளர் அடையாளம் காணப் பட்டதைத் தொடர்ந்து, இந்தப் பிராந்தியத்தில் 72 மணி நேர முடக்கநிலை நடைமுறைக்கு வந்துள்ளது.

நாட்டில் Covid-19 தொற்றின் நிலமை குறித்துக் கலந்தாலோசிக்க, National Cabinet ஐந்து வாரங்களின் பின்னர் இன்று கூடுகிறது.  சிறுவர்களுக்குத் தடுப்பூசி வழங்குதல் மற்றும் நாடளாவிய அளவில் மீண்டும் சர்வதேசப் பயணங்களைத் தொடங்குவது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

COVID-19 தொற்று மூலம் நுரையீரலைச் செயலிழக்கச் செய்யும் மரபணுவை இங்கிலாந்தின் Oxford பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.  இந்த மரபணு தெற்காசிய வம்சாவளி மக்களிடையே பொதுவானது என்றும் அவர்களுக்குத் தொற்று ஏற்பட்டால் அவர்கள் இறப்பதற்கான சாத்தியக்கூறு இரட்டிப்பாகும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.


Covid-19 புள்ளிவிவரங்கள்

  • விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,343 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் பத்துப் பேர் உயிரிழந்துள்ளார்கள்.
  • New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 249 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளார்கள்.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

NSW பயணம் குறித்த தரவுகள்  மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

VIC பயணம் குறித்த தரவுகள்வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share

3 min read

Published

By Kulasegaram Sanchayan




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now