ஆஸ்திரேலியாவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை 90 சதவீதத்தை தாண்டியது!

கொரோனா வைரஸ் குறித்து டிசம்பர் மாதம் 17ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Prime Minister Scott Morrison at a press conference during a visit to Opie Manufacturing at Emu Plains in Western Sydney, Friday, December 17, 2021. (AAP Image/Mick Tsikas) NO ARCHIVING

Prime Minister Scott Morrison said we should keep calm and keep getting vaccinated to deal with the recent outbreak. Source: AAP Image/Mick Tsikas

  • ஆஸ்திரேலியாவில் முழுமையாக கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை 90 சதவீதத்தை தாண்டியுள்ளது. 
  • இதையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் Scott Morrison இனிமேல் முடக்கநிலை கட்டுப்பாடுகளுக்குள் நாம் செல்ல முடியாது என கூறினார். 
  • NSW மாநிலத்தில் ஒரே நாளில் பதிவுசெய்யப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று உச்சத்தையடைந்தது. புதிதாக 63 Omicron தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
  • NSW மாநிலத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையடுத்து, சுகாதார மையங்களுக்கு செல்லும் பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
  •  கோவிட் தொற்றாளர் ஒருவர் பிரிஸ்பேனில் உள்ள முதியோர் பராமரிப்பு மையமொன்றுக்கு சென்றதையடுத்து அம்மையம் மூடப்பட்டுள்ளது.
  • குயின்ஸ்லாந்திலுள்ள சில்லறை விற்பனை நிலையங்கள், பொது போக்குவரத்து மற்றும் டாக்ஸி மற்றும் ridesharing சேவைகளில் முககவசம் அணியவேண்டுமென்ற கட்டுப்பாடு டிசம்பர் 29 முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
  • டிசம்பர் 28 முதல் தெற்கு ஆஸ்திரேலியாவில் சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு 72 மணிநேரமாக குறைக்கப்படுகிறது.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,510 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும்  7 பேர் உயிரிழந்துள்ளனர். 

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 2,213 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தெற்கு ஆஸ்திரேலியாவில் புதிதாக 64 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

ACT- இல் சமூகப் பரவல் மூலம், புதிதாக 20 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 20 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

NSW பயணம் குறித்த தரவுகள்  மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

VIC பயணம் குறித்த தரவுகள்வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

3 min read

Published

By SBS/ALC Content

Source: SBS




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now