விக்டோரியாவில் 9 பேர், குயின்ஸ்லாந்தில் 31 பேர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 33 பேர் என நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 85 இறப்புகள் பதிவாகியுள்ளன.
நாட்டின் தற்போதைய கோவிட்-19 பரவல், குரங்கம்மை (MPX) மற்றும் foot and mouth நோய் நிலைமைகளை மதிப்பாய்வு செய்வதற்காக நடைபெற்ற தேசிய அமைச்சரவையின் மெய்நிகர் கூட்டத்திற்கு பிரதமர் Anthony Albanese தலைமை தாங்கினார்.
தற்போதைய ஓமிக்ரான் அலை எதிர்பார்க்கப்பட்டதைவிட முன்னதாகவே உச்சத்தை எட்டியிருக்கலாம் என்று தரவு காட்டுவதாக சுகாதார அமைச்சர் Mark Butler கூறியுள்ளார். ஆனால் புதிய தொற்றுகள் குறைவதற்கு பள்ளி விடுமுறை ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய third-generation குரங்கம்மை தடுப்பூசியின் 450,000 டோஸ்களை ஆஸ்திரேலிய அரசு பெற்றுள்ளதாக அமைச்சர் Mark Butler தெரிவித்தார். 220,000 டோஸ்கள் அடங்கிய முதல் தொகுதி இந்த வாரம் வந்தடையவுள்ளது.
மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் விரைவில் இந்த தடுப்பூசிகளைப் பெற்று, அதன் விநியோகத்தை நிர்வகிக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் சமூக ஈடுபாடு மற்றும் கொள்கை ஆலோசனைகளை வழங்குவதற்காக தேசிய MPXV Taskforce- பணிக்குழுவை உருவாக்குவதாக Mark Butler கூறினார்.
NSW இல் தற்போதைய ஓமிக்ரான் அலை உச்சத்தை எட்டிவிட்டது என்று NSW Health தனது சமீபத்திய வாராந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலகளாவிய COVID-19 நோய்த்தொற்றுகள், முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது, கடந்த வாரம் ஒன்பது சதவீதம் குறைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இருப்பினும் ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் கொரியாவை உள்ளடக்கிய மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் புதிய வாராந்திர தொற்றுகள் 20 சதவீதம் அதிகரித்துள்ளன.
COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 14,387 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 33 பேர் மரணமடைந்தனர்.
விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 8,785 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 9 பேர் மரணமடைந்தனர்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 5,585 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 31 பேர் மரணமடைந்தனர்.
மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 3,852 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவர் மரணமடைந்தனர்
தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 2,933 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.மூவர் மரணமடைந்தனர்.
டஸ்மேனியாவில் புதிதாக 856 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 4 பேர் மரணமடைந்தனர்.
ACT- இல் புதிதாக 641 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூவர் மரணமடைந்தனர்.
NT-இல் 358 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: healthdirect.gov.au/covid19
உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: servicesaustralia.gov.au
உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்: mhcs.health.nsw.gov.au
உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: SBS Coronavirus portal
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus
என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
