NSW மாநிலத்தில் முகக்கவச கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தல்!

கொரோனா வைரஸ் குறித்து டிசம்பர் மாதம் 20ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

NSW Premier Dominic Perrottet

NSW Premier Dominic Perrottet Source: AAP

  • NSW மாநிலத்தில் சமூகப்பரவல் மூலம் புதிதாக 2501 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதேநேரம் தொற்று காரணமாக எவரும் மரணமடையவில்லை.
  • NSW மாநிலத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையடுத்து அங்கு முகக்கவச கட்டுப்பாடு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துவருகிறது. எனினும் மாநில Premier Dominic Perrottet இக்கோரிக்கைகளுக்கு இதுவரை செவிசாய்க்கவில்லை.
  • புதிய Omicron திரிபு அதிகளவில் பரவும்தன்மை கொண்டதாக இருப்பதால்,  அவசர நடவடிக்கை தேவை என Westmead மருத்துவமனையின் immunologist Dan Suan தெரிவித்துள்ளார்.
  • ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை வளர்ச்சி 2024/25 இல் 1.4 சதவீதமாக உயரும் எனவும், 2021/22 இல் வெறும் 0.3 சதவீதமாகவே இது இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
  • தொற்றுநோய் பரவலுக்கு முந்தைய மதிப்பீடுகளுடன் ஒப்பிடுகையில், ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள்தொகை 10 ஆண்டுகளுக்குப் பிறகு 1.5 மில்லியன் குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு 48 மணி நேரத்திற்கும் இரு மடங்காக அதிகரித்து வருவதால், ஜனவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை "கணிசமான அளவு அதிகரிக்கும்" என்று எதிர்பார்க்கப்படுவதாக மாநில தலைமை சுகாதார அதிகாரி கூறியுள்ளார்.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,302 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 2,501 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  

NT-இல் புதிதாக 3 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

ACT- இல் சமூகப் பரவல் மூலம், புதிதாக 13 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 59 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

NSW பயணம் குறித்த தரவுகள்  மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

VIC பயணம் குறித்த தரவுகள்வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

3 min read

Published

Updated




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now