தடுப்பூசி கடவுச்சீட்டு அக்டோபர் மாதம் அறிமுகமாகிறது

கொரோனா வைரஸ் குறித்து செப்டம்பர் மாதம் 08ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்

A member of the public scans a QR code to check into a seafood store in Bankstown, Sydney, Wednesday, September 8, 2021. (AAP Image/Bianca De Marchi) NO ARCHIVING

A member of the public scans a QR code to check into a seafood store in Bankstown, Sydney, Wednesday, September 8, 2021. Source: AAP Image/Bianca De March

  • NSW வடக்குப் பகுதிகளில் உள்ள கழிவு நீரில் கொரோனா வைரஸ் கூறுகள்
  • விக்டோரிய மாநிலத்தில் (Shepparton தவிர்த்து) பிராந்திய இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன
  • ACTயில் வாழும் ஆண்டு 12 மாணவர்கள் தடுப்பூசி போட முன் பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள்

 

நியூ சவுத் வேல்ஸ்

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,480 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் ஒன்பது பேர் இறந்துள்ளார்கள்.  இறந்தவர்களில் ஏழு பேருக்குத் தடுப்பூசி போடப்பட வில்லை.

தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கையின் ஏழு நாள் சராசரி செப்டம்பர் மாதத்தில் 1,500 என்ற நிலையில், பூர்வீக குடி பின்னணி கொண்டவர்கள் விரைவில் தடுப்பூசிகளைப் போடுமாறு, St Vincent's மருத்துவமனையின் Aunty Pauline Deweerd, பூர்வீக குடி மக்களைக் கேட்டுக் கொண்டார்.

Bonny hills என்ற இடத்தில் கழிவு நீரில் கொரோனா வைரஸ் கூறுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.  Glebe, Waterloo, Redfern, மற்றும் Marrickville ஆகிய இடங்களில் தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  மேலே குறிப்பிட்ட இடங்களில் வாழ்பவர்கள் உடனடியாகத் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

மாநிலத்தில் 75 சதவீதமானோர் தடுப்பூசியின் ஒரு சுற்றைப் போட்டிருக்கிறார்கள் என்றும், 45 சதவீதத்தினர் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுள்ளனர் என்றும் Premier Gladys Berejiklian கூறினார்.

தடுப்பூசி போட்டுக் கொள்ள இங்கே பதிவு செய்யலாம்.


 

விக்டோரியா

விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 221 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றுள்ளவர்களில் 98 பேருக்குத் தொற்று எப்படி ஏற்பட்டது என்பது தெரியும்.

ஐந்து காரணங்களுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியேறலாம் என்று விக்டோரிய மாநிலத்தின் பிராந்திய பகுதிகளில் நடைமுறையிலிருந்த கட்டுப்பாடுகள், Greater Shepparton தவிர்த்த மற்றைய பிராந்திய இடங்களில் செப்டம்பர் 9ஆம் தேதி நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றன.

மேலும் 10,000 பேர் AstraZeneca தடுப்பூசியை அடுத்த வாரம் போடலாம்.

தடுப்பூசி எங்கே போடலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்.


 

Australian Capital Territory

ACT பிராந்தியத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 20 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்று கண்டவர்களில் 11 பேர் தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளனர்.

ஆண்டு 12 மாணவர்கள் AIS Arena தடுப்பூசி மையத்தில் செப்டம்பர் 17ஆம் தேதிக்கு முன்னர் தடுப்பூசி போட (02) 5124 7700 என்ற இலக்கத்தை அழைத்து அதற்கான முன் பதிவை செய்யும்படி ஊக்குவிக்கப்படுகிறார்கள்

தடுப்பூசி எங்கே போடலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்.


 

கடந்த 24 மணி நேரத்தில்

  • சர்வதேச பயணத்திற்கான தடுப்பூசி கடவுச்சீட்டு அக்டோபர் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வரும் என்று அரசு அறிவித்துள்ளது ஆனால், சர்வதேச பயணத்திற்காக நாட்டின் எல்லைகள் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

NSW பயணம் குறித்த தரவுகள்  மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

VIC பயணம் குறித்த தரவுகள்வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share

4 min read

Published

Updated

By SBS/ALC Content, Kulasegaram Sanchayan

Source: SBS




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now

தடுப்பூசி கடவுச்சீட்டு அக்டோபர் மாதம் அறிமுகமாகிறது | SBS Tamil