RAT உபகரணங்களின் விலை உயர்வு தொடர்பில் பொலீஸ் விசாரணை ஆரம்பமாகிறது!

கொரோனா வைரஸ் குறித்து பெப்ரவரி மாதம் 1ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Vifaa vya vipimo vya rapid antigen vyatolewa ndani ya boxi

Vifaa vya vipimo vya rapid antigen vyatolewa ndani ya boxi Source: AAP

  • Rapid antigen  சோதனை உபகரணங்களின் விலைகளை அதிகரித்து விற்றவர்கள் தொடர்பில்  Australian Competition and Consumer Commission (ACCC) பொலிஸாரிடம் முறையிட்டுள்ளது.
  • வேண்டுமென்றே Rapid antigen  சோதனை உபகரணங்களின் விலைகளைக் கூட்டி விற்பனை செய்தவர்கள் தொடர்பில், ஒரு மாதத்தில் சுமார் 4000 முறைப்பாடுகள் Australian Competition and Consumer Commission (ACCC) க்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  • முதியோர் பராமரிப்புத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான ஊக்கத்தொகையாக சுமார் 800 டொலர்களை அரசு வழங்கவுள்ளது. இதற்கென 209 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்படுகிறது.
  • ஆனால் தேர்தலில் வாக்குகளைப் பெறவேண்டுமென்பதற்காக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை இதுவென விமர்சித்துள்ள தொழிற்சங்கம், தாம் தொடர்ச்சியக கோரிவரும் 25 வீத சம்பள உயர்வை வழங்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
  • குழந்தைகளிடையே நோய்த்தடுப்பு விகிதங்களை அதிகரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, விக்டோரியா அரசு Melbourne’s Zoo, Aquarium உள்ளிட்ட இடங்களில் pop-up தடுப்பூசி கிளினிக்குகளைத் திறக்கவுள்ளது. 
  • நாட்டின் எல்லைகளை மீண்டும் திறப்பதற்கான தேதியை இறுதி செய்வதற்காக நியூசிலாந்தின் அமைச்சரவை இன்று கூடுகிறது.
  • Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
  • Victoria
  • NSW
  • Queensland
  • South Australia
  • Tasmania
  • Northern Territory
  • ACT

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மேலும் 12,818 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 30 பேர் மரணமடைந்தனர். 2,749 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 183 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 11,311 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 34 பேர் மரணமடைந்தனர். 851 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 106 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 7,588 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 10 பேர் மரணமடைந்தனர். 868 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 59 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

டஸ்மேனியாவில் புதிதாக 699 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 16 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

தெற்கு ஆஸ்திரேலியாவில் புதிதாக 1266 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 3 பேர் மரணமடைந்தனர். 273 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 22 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

ACT-இல் புதிதாக 522 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

NSW பயணம் குறித்த தரவுகள்  மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

VIC பயணம் குறித்த தரவுகள்வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

3 min read

Published

Updated




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now