விக்டோரியாவில் 15 பேர், தெற்கு ஆஸ்திரேலியாவில் நால்வர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 6 பேர் என நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 28 இறப்புகள் பதிவாகியுள்ளன.
கோவிட் தொற்றுநோயின் தொடக்கத்தில் முன்னாள் பிரதமர் Scott Morrison தன்னை சுகாதார, நிதி மற்றும் வளங்களின் கூட்டு அமைச்சராக நியமித்தார் என்ற கூற்றுக்களை தனது அரசு விசாரிக்கும் என்று பிரதமர் Anthony Albanese தெரிவித்தார்.
"Scott Morrison ஒரு நிழல் அரசை நடத்திக் கொண்டிருந்தார்" என்று Anthony Albanese கூறினார்.
தொற்றுநோய் பரவல் சில்லறை வணிகத்தை ஆழமாக மாற்றியமைத்துள்ளதாக ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் (ANU) மற்றும் சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான புதிய மருத்துவ மையத்திற்கான நிதியுதவியை விக்டோரிய அரசு அறிவித்துள்ளது.
891 ABC ADELAIDEஇடம் பேசிய சுகாதார அமைச்சர் Mark Butler bulk billingஐ நிறுத்தும் திட்டம் இல்லை என்று கூறினார்.
டாஸ்மேனியாவில் ஆகஸ்ட் 30 முதல் கோவிட்-19 சமூக தடுப்பூசி மையங்கள் மூடப்படும். குடியிருப்பாளர்கள் தங்கள் தடுப்பூசிகளை GPs மற்றும் மருந்தகங்களில் பெறலாம்.
ரோமானிய எண்களைப் பயன்படுத்தி monkeypox வகைகளை மறுபெயரிட உலக சுகாதார நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. புதிய பெயர்களை யார் வேண்டுமானாலும் பரிந்துரைக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது
COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 5,490 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6 பேர் மரணமடைந்தனர்.
விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 3,648 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 15 பேர் மரணமடைந்தனர்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 1,901 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 1,605 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவர் மரணமடைந்தனர்.
தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 1,194 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 4 பேர் மரணமடைந்தனர்.
டஸ்மேனியாவில் புதிதாக 398 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ACT- இல் புதிதாக 287 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
NT-இல் 100 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: healthdirect.gov.au/covid19
உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: servicesaustralia.gov.au
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
——————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.