நாற்பது இலட்சம் விக்டோரியர்கள் தடுப்பூசி போட்டுள்ளார்கள்; NSWஇல் குழு விளையாட்டுகள் தொடங்கின

கொரோனா வைரஸ் குறித்து அக்டோபர் மாதம் 23ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

NSW Premier Dominic Perrottet has announced a $25m boost for community sport

NSW Premier Dominic Perrottet has announced a $25m boost for community sport. Source: AAP

  • விக்டோரியா மாநிலத்தில் நாற்பது இலட்சம் பேர் தடுப்பூசியை முழுமையாகப் போட்டு விட்டார்கள்
  • NSW மாநிலத்தில் தகுதி வாய்ந்த தொழிலாளர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது என்கிறார் மாநில Premier
  • உள்ளூர் விமானப் பயணங்களை விட மிக அதிகமாக சர்வதேச விமானப் பயண சீட்டுகளை விற்றுள்ளதாக Qantas அறிவித்தது

விக்டோரியா

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,750 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளார்கள்.  மாநிலத்தில் ஆறாவது முறையாக நடைமுறைப் படுத்தப்பட்டிருந்த முடக்கநிலை கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட முதலாவது வார இறுதி இதுவாகும்.

தொற்று ஏற்பட்டு 770 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.  அவர்களில் 144 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.  90 பேருக்கு சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் வாரங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை உச்சத்தைத் தொடும் என்று அதிகாரிகள் எச்சரித்தார்கள்.

விக்டோரியா மாநிலத்தில் நாற்பது இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டு விட்டார்கள் என்றும், அதனால் கட்டுப்பாடுகளில் மேலதிக தளர்வுகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தலாம் என்றும் மாநில COVID-19 Commander, Jeroen Weimar கூறினார்.


நியூ சவுத் வேல்ஸ்

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 332 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

மாநிலத்தில் சில பாடசாலைகளில் தொற்று பரவி இருப்பதால் அந்தப் பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டு தொற்று நீக்கிகளால் சுத்தம் செய்யப்படுகின்றன என்றும் தொடர்பு தடமறிதல் மூலம் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளவர்கள் அடையாளம் காணப்படுவதாகவும், அதிகாரிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு அறிவித்தார்கள்.

NSW மாநிலத்தில், குறிப்பாக பிராந்திய இடங்களில், விடுதிகள் உணவகங்கள் போன்ற விருந்தோம்பல் (hospitality) தொழில் துறையில், தகுதி வாய்ந்த தொழிலாளர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது என்கிறார் மாநில Premier Dominic Perrottet கூறினார்.  இந்தத் தொழில் துறையில் வியாபாரம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்றும், அதில் பணிபுரியத் தேவையான தொழிலாளர்கள் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

மாநிலத்தில் குழு விளையாட்டுகளை (community sport) ஊக்குவிக்க மேலதிகமாக 25 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில்

  • முன்னர் திட்டமிட்டதற்கு முன்னராகவே சர்வதேச விமானப் பயணங்கள் தொடங்கும் என்ற அறிவிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்றும், உள்ளூர் விமானப் பயணங்களை விட மிக அதிகமாக சர்வதேச விமானப் பயண சீட்டுகள் விற்கப்பட்டுள்ளதாகவும் Qantas தலமை நிர்வாக அதிகாரி Alan Joyceகூறினார்.
  • ACTயில் சமூகப் பரவல் மூலம் புதிதாக 24 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது; குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

NSW பயணம் குறித்த தரவுகள்  மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

VIC பயணம் குறித்த தரவுகள்வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share

4 min read

Published

By Kulasegaram Sanchayan




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now