- புதிய Omicron திரிபின் தாக்கத்தை மதிப்பாய்வு செய்வதற்காக, அடுத்த 2 நாட்களுக்குள் தேசிய அமைச்சரவைக் கூட்டம் மற்றும் பாதுகாப்புக்கூட்டம் என்பவை நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படுகிறது.
- தென்னாப்பிரிக்காவில் இருந்து சிட்னிக்கு வந்த இரண்டு பயணிகளுக்கு Omicron தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. Omicron பரவல் அபாயமுள்ள ஒன்பது தென்னாப்பிரிக்க நாடுகளிலிருந்து, ஆஸ்திரேலியர் அல்லாதவர்கள் தற்போது ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய அனுமதி இல்லை.
- பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து மருத்துவ ஆலோசனையைப் பெற்று தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் Greg Hunt தெரிவித்துள்ளார். முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட skilled workers மற்றும் சர்வதேச மாணவர்கள் என ஆஸ்திரேலிய விசா வைத்திருக்கும் அனைவருக்கும் ஆஸ்திரேலிய எல்லைகள் டிசம்பர் 1 புதன்கிழமை மீண்டும் திறக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
- சர்வதேச சான்றுகள் மற்றும் புதிய Omicron திரிபு பரவலையடுத்து, booster தடுப்பூசி வழங்கப்படுவதற்கான கால அளவை மறுபரிசீலனை செய்யுமாறு ஆஸ்திரேலியாவின் தடுப்பூசி ஆலோசனைக் குழுவான ATAGIஐ அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இரண்டாவது சுற்று தடுப்பூசி போடப்பட்டதிலிருந்து ஆறு மாதங்கள் கழித்து booster தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்பது தற்போதுள்ள அறிவுறுத்தலாகும்.
- உலக சுகாதார நிறுவனம் Omicron பற்றிய தகவலை Arabic | Simplified Chinese | French | Russian | Spanish | Portuguese ஆகிய மொழிகளிலும் வழங்கியுள்ளது.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.