Omicron அலையின் போது அதிகளவு குழந்தைகள் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்

கொரோனா வைரஸ் குறித்து ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்

QUEENSLAND SCHOOLS RETURN

Children under five represent 2.47 per cent, and those aged 5-14 represent 10.44 per cent of the total global COVID-19 cases. (file) Source: AAP / RUSSELL FREEMAN/AAPIMAGE

விக்டோரியாவில் 14 பேர், குயின்ஸ்லாந்தில் 18 பேர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 35 பேர் என நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 86 இறப்புகள் பதிவாகியுள்ளன.

Medicare இல்லாதவர்களும் antiviral கோவிட்-19 மாத்திரைகளை பெறலாம் என்று ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், Medicare உள்ளவர்கள் அல்லது இல்லாதவர்களுக்கு இலவச சேவைகளை வழங்கும் கிளினிக்குகளை அவர்கள் தொடர்பு கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொற்றுநோயின் ஆரம்பக் கட்டத்துடன் ஒப்பிடும்போது, Omicron அலையின் போது குழந்தைகளில் கோவிட் தொற்று வியத்தகு முறையில் அதிகரித்ததாக உலக சுகாதார அமைப்பு அதன் சமீபத்திய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

உலகளாவிய மொத்த கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 2.47 சதவீதத்தினரும் 5-14 வயதுடையவர்களில் 10.44 சதவீதத்தினரும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 9,528 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 35 பேர் மரணமடைந்தனர்.

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 5,180 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 14 பேர் மரணமடைந்தனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 3,303 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 18 பேர் மரணமடைந்தனர்.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 2,327 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 5 பேர் மரணமடைந்தனர்.

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 1,482 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 12 பேர் மரணமடைந்தனர்.

டஸ்மேனியாவில் புதிதாக 509 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.

ACT- இல் புதிதாக 474 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.

NT-இல் 175 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

ACT 

New South Wales 

Northern Territory 

Queensland

South Australia 

Tasmania 

Victoria 

Western Australia

Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

ACT 

New South Wales 

Northern Territory 

Queensland

South Australia 

Tasmania 

Victoria 

Western Australia

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: healthdirect.gov.au/covid19

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: servicesaustralia.gov.au

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்: mhcs.health.nsw.gov.au

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: SBS Coronavirus portal

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

2 min read

Published

Updated

Source: SBS



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now