- வேலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கோவிட்-19 சோதனைகளுக்கான செலவுகளை, வணிகங்களும் தனிநபர்களும் வரியில் கழித்துக்கொள்ள முடியுமென கருவூலக் காப்பாளர்-Treasurer Josh Frydenberg அறிவித்துள்ளார். இந்தச் சட்டமானது ஜூலை 1 2021 இலிருந்து நடைமுறைக்குவந்துள்ளதாக தேதியிடப்படுகிறது.
- சில மாநிலங்களில் இன்று முதல் elective surgery மீண்டும் தொடங்குகிறது. விக்டோரியாவில் தனியார் மருத்துவமனைகள் மற்றும் பகல்நேர மையங்கள் 50 சதவீத திறனுடன் elective surgery-களை மீண்டும் ஆரம்பிக்கின்றன. அதே நேரத்தில் NSW இல் சில நோயாளிகள் தனியார் மையங்கள் மற்றும் சில regional பொது மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவார்கள்.
- குயின்ஸ்லாந்தில் உள்ளவர்கள் இனி check-in செயலியை குறிப்பிட்ட சில இடங்களில் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால் தடுப்பூசி போட்டதற்கான ஆதாரம் பல இடங்களில் தொடர்ந்தும் தேவைப்படும். கடந்த வாரம் குயின்ஸ்லாந்து மாநிலம் omicron பரவலின் உச்சத்தை எட்டியதாக மாநில அரசு கூறியுள்ளது.
- ACT-உம் check-in தேவைகளுக்கான மாற்றங்களை அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு 11.59 மணி முதல் குறிப்பிட்ட சில இடங்களுக்கு இனி கட்டாய QR code check-ins தேவையில்லை.
- NSW மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கநிலையில்போது, தமது குழந்தைகள் வீட்டிலிருந்தே கல்வியைத் தொடர உதவிய பெற்றோருக்கு, அரச மானியத்துடன் கூடிய holiday vouchers வழங்கப்படுவதாக Premier அறிவித்துள்ளார். தகுதிபெறும் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருவர் ஐந்து $50 voucher-களைப் பெறுவார். இன்று திங்கள்கிழமை முதல் இவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், இவற்றைப் பயன்படுத்தி அக்டோபர் தொடக்கம் வரை, மாநிலம் முழுவதும் தங்குமிடம் அல்லது பொழுதுபோக்குகளுக்கு முன்பதிவு செய்யலாம்.
- கோவிட்-19 பரவல் காரணமாக 2 வார தாமதத்திற்குப் பிறகு குயின்ஸ்லாந்து மாணவர்கள் இன்று பள்ளிகளுக்குத் திரும்புகின்றனர்.
- Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
- Victoria
- NSW
- Queensland
- South Australia
- Tasmania
- Northern Territory
- ACT
COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மேலும் 7,437 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 14 பேர் மரணமடைந்தனர். 2,099 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 137 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 8,275 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 7 பேர் மரணமடைந்தனர். 638 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 72 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 4701 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 19 பேர் மரணமடைந்தனர். 663 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 43 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
டஸ்மேனியாவில் புதிதாக 443 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 15 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
NSW பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
VIC பயணம் குறித்த தரவுகள், வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
