'புதிய அலைக்கு முன்பாகவே அரைவாசி ஆஸ்திரேலியர்கள் கோவிட் தொற்றுக்கு உள்ளாகிவிட்டனர்'

கொரோனா வைரஸ் குறித்து ஜுலை மாதம் 27ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Actualización COVID-19: casi la mitad de la población australiana contrajo el virus antes de la ola actual, afirma un nuevo informe

Actualización COVID-19: casi la mitad de la población australiana contrajo el virus antes de la ola actual, afirma un nuevo informe Source: AAP Image/Con Chronis

விக்டோரியாவில் 32 பேர், குயின்ஸ்லாந்தில் 19 பேர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 20 பேர் என நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 82 இறப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் 49,071  பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நோய்த்தடுப்பு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்புக்கான தேசிய மையம் மற்றும் Kirby Institute ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள இரண்டாவது  'serosurveillance' அறிக்கையின்படி, ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகையில் 46 சதவீதம் பேர் ஜூன் தொடக்கத்தில் மற்றும் சமீபத்திய ஓமிக்ரான் அலை தொடங்குவதற்கு முன்பு கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். பெரும்பாலான நோய்த்தொற்றுகள் முந்தைய மூன்று மாதங்களில் பதிவாகியுள்ளன.

குயின்ஸ்லாந்து குழந்தைகள் மருத்துவமனையில் 23 மாத குழந்தையொன்று கோவிட் தொற்று காரணமாக ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்துள்ளது. இருப்பினும், அதிகாரிகள் செவ்வாய்க்கிழமையன்று இம்மரணத்தை உறுதிப்படுத்தினர்.

இதுதொடர்பில் Deputy Premier Steven Miles குழந்தையின் குடும்பத்தினருக்கு இரங்கல்களைத் தெரிவித்தார்.

இதேவேளை முகக்கவச கட்டுப்பாடுகள் அல்லது பிற பொது சுகாதார நடவடிக்கைகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான எந்தவொரு திட்டத்தையும் Steven Miles நிராகரித்துள்ளார்.

Northern Territory ராயல் டார்வின் மருத்துவமனை, கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இரண்டு பிரத்தியேக வார்டுகளை மீண்டும் திறந்துள்ளது.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக  16,173 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 20 பேர் மரணமடைந்தனர். 

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 12,653  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 32 பேர் மரணமடைந்தனர். 

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 8,209 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 19 பேர் மரணமடைந்தனர்.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 5,422 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  மூவர் மரணமடைந்தனர். 

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 4,197  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  நால்வர் மரணமடைந்தனர். 

டஸ்மேனியாவில் புதிதாக 1313 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நால்வர் மரணமடைந்தனர். 

ACT- இல் புதிதாக  1104 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

ACT   New South Wales   Northern Territory   Queensland   South Australia  Tasmania   Victoria    Western Australia

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

ACT   New South Wales   Northern Territory   Queensland   South Australia   Tasmania  Victoria   Western Australia 

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: healthdirect.gov.au/covid19

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: servicesaustralia.gov.au

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்: mhcs.health.nsw.gov.au

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: SBS Coronavirus portal

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

3 min read

Published

Updated




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now