விக்டோரியாவில் ஆறு மற்றும் நியூ சவுத் வேல்ஸில் நான்கு உட்பட குறைந்தது 10 COVID-19 இறப்புகள் நாட்டில் பதிவாகியுள்ளன.
நாட்டின் மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் புதிய கோவிட் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள வேளையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் ICU அவசர சிகிச்சை பிரிவு சேர்க்கைகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன.
நாட்டின் சில பகுதிகளில் ஏப்ரல் 4 முதல் மிகக் குறைந்த கோவிட் தொற்றுகள் தொடர்ந்து காணப்பட்டு வருகிறது.
COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 5,013 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 4 பேர் மரணமடைந்தனர்.
விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 2,600 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6 பேர் மரணமடைந்தனர்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 1,587 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 1,119 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 786 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
டஸ்மேனியாவில் புதிதாக 214 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.
ACT- இல் புதிதாக 213 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
NSW மாநிலத்தில் கடந்த வாரயிறுதியில் சமூக பரவல் மூலம் ஏற்பட்ட முதலாவது குரங்கம்மை தொற்று பதிவாகிவுள்ளது. மாநிலத்தில் தற்போது 42 குரங்கம்மை தொற்றாளர்கள் உள்ளனர் இதில் பெரும்பான்மையானவர்கள் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய சர்வதேச பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை நாட்டில் 3,917 கோவிட் தொற்றாளர்கள் உள்ளனர் என்றும் அதில் 592 பேர் முதியோர் பராமரிப்பு நிலையங்களில் உள்ளவர்கள் என சுகாதாரத் திணைக்களத்தின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
கோவிட் தொற்று காலத்தின் முதல் இரண்டு ஆண்டுகளில் விவாகரத்து வேண்டி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளன என நாட்டின் Federal Circuit மற்றும் குடும்ப நீதிமன்றத்தின் தரவு காட்டுகிறது.
2019-20 இல் 45,886 மற்றும் 2018-19 இல் 44,432 விண்ணப்பங்களுடன் ஒப்பிடுகையில் 2020-21 இல் மொத்தம் 49,625 விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன.
ஜப்பானிய பிரதமர் Fumio Kishida-விற்கு கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய:
உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள:
உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:
உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க:
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்
sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
——————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது
tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
