நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 50 இறப்புகள் பதிவாகியுள்ளன.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிய கோவிட் தொற்றுகளுக்கு பெரும்பாலும் Omicron-இன் BA.2 துணைத்திரிபே காரணம் என NSW Health கூறியுள்ளது.
இருப்பினும், BA.4 மற்றும் BA.5 ஆகியவற்றால் ஏற்படும் தொற்றுக்களின் விகிதம், சமீபத்திய வாரங்களில் அதிகரித்துள்ளதாகவும், BA.5 ஆனது BA.4 ஐ விட அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
ஐரோப்பாவில் இருந்து நியூ சவுத் வேல்ஸ் திரும்பிய பயணி ஒருவருக்கு குரங்கம்மைத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
டாஸ்மேனிய மாநிலத்தவர்கள் ஜூன் 6 முதல் நான்கு வாரங்களுக்கு இலவச flu தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும்.
குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ், தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் விக்டோரியாவில் வசிப்பவர்களும் ஜூன் 30 வரை இலவச flu தடுப்பூசியைப் பெற முடியும்.
கோவிட் தொடர்பான மோசடிகள் குறித்து ஆஸ்திரேலிய அரசு எச்சரித்துள்ளது.
கொரோனா தொடர்பிலான 6,415 க்கும் மேற்பட்ட மோசடி முறைப்பாடுகளை Scamwatch பெற்றுள்ளதாகவும், தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட 1 மில்லியன் டொலர்கள் இந்த மோசடிகளில் இழக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 7,412 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 11 பேர் மரணமடைந்தனர்.
விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 9,583 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 22 பேர் மரணமடைந்தனர்.
டஸ்மேனியாவில் புதிதாக 725 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 3,790 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6 பேர் மரணமடைந்தனர்.
மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 7,092 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6 பேர் மரணமடைந்தனர்.(இம்மரணங்கள் முன்னைய தேதிகளில் நேர்ந்துள்ளன).
தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 2,468 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 5 பேர் மரணமடைந்தனர்.
ACT- இல் புதிதாக 874 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
NT-இல் புதிதாக 178 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
ACT New South Wales Northern Territory Queensland South Australia Tasmania Victoria Western Australia
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
ACT New South Wales Northern Territory Queensland South Australia Tasmania Victoria Western Australia
ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: healthdirect.gov.au/covid19
உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: servicesaustralia.gov.au
உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: SBS Coronavirus portal
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.