ஆஸ்திரேலியாவில் மற்றுமொரு கோவிட் துணைத்திரிபு கண்டறியப்பட்டது!

கொரோனா வைரஸ் குறித்து ஜுலை மாதம் 15ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

A los viajeros que lleguen a Australia desde Indonesia se les pedirá que caminen sobre alfombras sanitarias

A los viajeros que lleguen a Australia desde Indonesia se les pedirá que caminen sobre alfombras sanitarias Source: AAP Image/James Gourley

விக்டோரியாவில் 17 பேர், குயின்ஸ்லாந்தில் 20 பேர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 14 பேர் என நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 66 இறப்புகள் பதிவாகியுள்ளன. 

குயின்ஸ்லாந்து, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் டாஸ்மேனியாவில், கோவிட் தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்தும் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

பிரதமர் Anthony Albanese திங்களன்று தேசிய அமைச்சரவையின் திடீர் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மூன்றாவது ஓமிக்ரான் அலை மற்றும் தனிமைப்படுத்தப்பட வேண்டிய தொழிலாளர்களுக்கு $750 pandemic leave கொடுப்பனவு வழங்குவதுபற்றி இக்கூட்டத்தில் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சிகள், மாநில premiers மற்றும் சில லேபர் எம்.பி.க்கள், குறைந்தபட்சம் குளிர்காலம் முடியும் வரை pandemic leave கொடுப்பனவை வழங்குமாறு பிரதமரிடம் கேட்டுள்ளனர்.

புதிய ஓமிக்ரான் துணைத்திரிபான B.2.75 மூன்று சர்வதேச பயணிகளிடம் கண்டறியப்பட்டுள்ளதாக NSW Health அறிவித்துள்ளது. இப்புதிய திரிபு 10 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் B.2.75-ஐக் கண்காணித்து வருகிறபோதிலும் அதை கரிசனைக்குரிய திரிபாக இன்னும் அறிவிக்கவில்லை.

கோவிட் தொற்றால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய குழுவினருக்கு இலவச RAT கருவிகளை வழங்க NSW அரசு திட்டமிட்டுள்ளது.

தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் Northern Territory ஆகியன, கோவிட் தொற்று ஒருவருக்கு மீண்டும் ஏற்படக்கூடிய காலப்பகுதியை(reinfection period), 14 வாரங்களில் இருந்து 28 நாட்களாகக் குறைத்துள்ளன.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக  12,228 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 14 பேர் மரணமடைந்தனர். 

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 10,584  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 17 பேர் மரணமடைந்தனர். 

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 6,336 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 20 பேர் மரணமடைந்தனர்.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 6,548 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  8 பேர் மரணமடைந்தனர்.

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 4,453  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6 பேர் மரணமடைந்தனர்.

டஸ்மேனியாவில் புதிதாக 1727 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.

ACT- இல் புதிதாக  1208 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

NT- இல் புதிதாக  494 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

ACT   New South Wales   Northern Territory   Queensland   South Australia  Tasmania   Victoria    Western Australia

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

ACT   New South Wales   Northern Territory   Queensland   South Australia   Tasmania  Victoria   Western Australia 

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: healthdirect.gov.au/covid19

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: servicesaustralia.gov.au

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்: mhcs.health.nsw.gov.au

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: SBS Coronavirus portal

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

3 min read

Published




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now